இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு
ஆதரவாக இளம் வயதிலேயே
ரகசிய வானொலி
நிலையம் நடத்தி
சாதனை படைத்த
சுதந்திரப் போராட்ட வீரர்
உஷா மேத்தா
மார்ச் – 25 – 1920 –
இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்
உஷா மேத்தா,
105-வது பிறந்த தினம்
இந்திய சுதந்திர போராட்டம்: ரகசிய வானொலி நிலையம் நடத்திய உஷா மேத்தா
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மார்ச். 25. -
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி. பாம்பே (இப்போது மும்பை) கொவாலியா டேங்க் மைதானத்தில் மகாத்மா காந்தியின் பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
"நான் இன்று உங்களுக்கு ஒன்று கூறுகிறேன். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் 'செய் அல்லது செத்து மடி'" என்று கூறினார் காந்தி.
"வெள்ளையனே வெளியேறு"
அதோடு அனைவரையும் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் சேருமாறு கோரினார்.
மகாத்மா காந்தியின் இந்த பேச்சை கேட்ட இளம் மாணவியான
உஷா மேத்தா,
இதனை தன் மனதில்
பதிந்து கொண்டு
இந்திய சுதந்திர போராட்டத்தில்
பெரும் பங்காற்றினார்.
'குஜராத்தி பெண்ணின் ரகசிய வானொலி நிலையம்'
வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து மகாத்மா காந்தி மற்றும் பிற முக்கிய காங்கிரஸ் தலைவர்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்தது.
முக்கிய தலைவர்களை கைது
செய்வதன் மூலம்
அந்த இயக்கத்திற்கு
முற்றுப்புள்ளி வைப்பதே
பிரிட்டிஷாரின் நோக்கமாக
இருந்தது.
ஆனால் அந்த இயக்கத்தை தொடர்ந்து நடத்த சுதந்திர போராட்ட வீரர்கள் ஏற்கனவே பின்னணியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த செயல்பாட்டில் ஒன்றுதான்
"ரகசிய வானொலி நிலையம்".
வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு உருவம் கொடுக்க இந்த ரேடியோ முக்கியமானதாக இருந்தது.
'காங்கிரஸ் ரேடியோ'
உஷா மேத்தாவின் கதையிலும் வரலாற்றுப் புத்தகங்களிலும் இது 'காங்கிரஸ் ரேடியோ' என்று அழைக்கப்படுகிறது.
உஷா மேத்தாவின் தந்தை
நீதிபதியாக இருந்து ஓய்வு
பெற்ற பிறகு
1933 ஆம் ஆண்டு அவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.
பிரிட்டிஷாரின் ஆட்சியில் அவர் நீதிபதியாக இருந்ததால் தனது மகள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது.
ஆனால் இந்த விஷயம் உஷாவை நிறுத்தவில்லை.
இளம் வயதிலேயே பல மறியல்கள் ஊர்வலங்கள் மற்றும் காதி நூற்பு உள்ளிட்ட செயல்பாடுகளில் உஷா மேத்தா ஈடுபட்டார் என நவீன் ஜோஷி எழுதிய 'Freedom Fighter Remember' என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
'திரும்பிப் போ சைமன்',
"1928ஆம் ஆண்டு. எனக்கு அப்போது 8 வயது இருக்கும். பிரிட்டிஷாரை கண்டித்து நான் எழுப்பிய முதல் கோஷம் 'திரும்பிப் போ சைமன்',"
தன்னுடைய உறவினர்களும்
சுதந்திரப் போராட்ட
இயக்கங்களில் இருந்து
வந்ததால் தானும் அதில்
பங்குபெற வேண்டும் என்ற
உந்துதல் இருந்ததாக
உஷா மேத்தா கூறினார்.
ரகசிய வானொலி நிலையம்
செயல்பட்டது எப்படி
"இந்தியாவின் ஏதோ ஒரு இடத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது 42.34m. இது காங்கிரஸ் ரேடியோ"
இப்படியாகத்தான்
அந்த வானொலி ஒளிபரப்பு தொடங்கியது.
மும்பையில் உள்ள
செளபாட்டி என்ற இடத்திற்கு
அருகே உள்ள கட்டிடம்
ஒன்றின் மேல் மாடியில் தான்
இந்த டிரான்ஸ்மிஷன் சென்டர் செயல்பட்டதாக
'The Quit India Movement'
புத்தகத்தில் எழுத்தாளர்
அருண் சந்திரன்
குறிப்பிட்டுள்ளார்.
'Chicago and telephone Co'
என்ற நிறுவனத்தால் இதற்கான தொழில்நுட்ப உதவி வழங்கப்பட்டது.
------------------------------------------------.