தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில்
நல்லூர், பேகேப்பள்ளி ஊராட்சி
கிராமங்களை ஓசூர் மாநகராட்சியுடன்
இணைக்க எதிர்ப்பு தெரிவித்து
ஆர்ப்பாட்டம்
ஓசூர். ஜனவரி. 30. –
பேராசிரியர்
எஸ்.ஏ.சின்னசாமி
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நல்லூர் ஊராட்சியில் உள்ள கிராமங்களான நல்லூர், மடிவாலம் மற்றும் பேகேப்பள்ளி ஊராட்சியில் உள்ள நல்லூர் அக்ரஹாரம், பாகூர் ஆகிய கிராமங்களையும், ஓசூர் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் சங்க தலைவர்
சின்னசாமி தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு
தமிழக விவசாயிகள் சங்க
மாவட்ட தலைவர்
பி. ஸ்ரீராம்ரெட்டி,
தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத்தலைவர்
சிக்கண்ணா(எ) நரசிம்மமூர்த்தி,
மாவட்ட செயலாளர்(மேற்கு)
பி.சந்திரசேகர்,
மகளிர் அணி மாவட்ட தலைவி
ஆர்.கிரிஜம்மா,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில தலைவர்
பேராசிரியர்
எஸ்.ஏ. சின்னசாமி,
சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து
ஓசூர் மாநகராட்சியுடன், நல்லூர் ஊராட்சி, பேகேப்பள்ளி ஊராட்சிகளின் கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னசாமி அளித்த மனுவை
ஓசூர் மாநகராட்சி
உதவி கமிஷனர்
டிட்டோ
பெற்றுக் கொண்டார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு ஓசூர் மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய அதன் அருகில் உள்ள
சில ஊராட்சிகளில் உள்ள கிராமங்களை ஓசூர் மாநகராட்சியோடு சேர்க்கப்படும் என்ற அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,
நல்லூர் ஊராட்சியில், நல்லூர், மடிவாலம்
கிராமங்கள் மற்றும் பேகேப்பள்ளி ஊராட்சியில் நல்லூர் அக்கிரஹாரம், பாகூர் கிராமங்களை ஓசூர் மாநகராட்சியோடு சேர்ப்பதாக குறிப்பிட்டுள்ளது சரி அல்ல.
இந்த கிராமங்களில் முற்றிலும் விவசாய நிலங்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலி பணிகளையே வாழ்வாதாரமாக கொண்டு விவசாயிகளும், கிராம மக்களும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த கிராமங்களை மாநகராட்சியோடு சேர்ப்பதால் கிராம வளர்ச்சி திட்டங்கள் பல தவிர்க்கப்படும். வளர்ச்சி என்ற பெயரில் இங்குள்ள விவசாய நிலங்கள் அழிக்கப்படும். விவசாயிகளும், விவசாய கூலிகளும், அவர்களின் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். வீட்டு வரி, நில வரி, தண்ணீர் வரி செலுத்தவே கஷ்டப்படும் அளவுக்கு பர மடங்கு அதிகரிக்கும்.
நில பதிவு மதிப்பு உயர்ந்து ஏழை விவசாயிகள், கிராம மக்கள் அவரவர் கஷ்டங்களுக்காக நிலங்களை விற்கவோ, வாங்கவோ மிகவும் கஷ்டப்படுவார்கள்.
எனவே அச்செட்டிப்பள்ளி, பூனப்பள்ளி, தொரப்பள்ளி, கெலவரப்பள்ளி, சென்னசந்திரம், ஊராட்சிகளில் சில கிராமங்களை ஓசூர் மாநகராட்சியோடு சேர்க்காமல் தவிர்த்ததை போல நல்லூர் ஊராட்சியில் நல்லூர், மடிவாலம் கிராமங்கள் மற்றும் பேகேப்பள்ளி ஊராட்சியில் நல்லூர் அக்ரஹாரம், பாகூர் கிராமங்களை முற்றிலும் விவசாய நிலங்கள்,
விவசாயம் மற்றும் விவசாய கூலி பணிகளை
சார்ந்தவை என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு மறு ஆய்வு செய்து இந்த கிராமங்களை ஓசூர் மாநகராட்சியோடு சேர்ப்பதை கைவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்,
ஓசூர் ஒன்றிய நிர்வாகிகள்
தலைவர்
சி.நாராயணப்பா,
செயலாளர்
பிரசன்னா
துணைத்தலைவர்
ரமேஷ்செட்டி,
துணைச்செயலாளர்
நாகராஜ்,
இளைஞர் அணி செயலாளர்
டி.வெங்கடேஷ்,
இளைஞர் அணி துணைச்செயலாளர்
என்.வெங்கடேஷ்,
நல்லூர் கிராம பிரமுகர்
பி.மாரப்ப கவுடு
மற்றும் விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
---------------------------------------.