மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்கள் (EVMs VVPAT)
முதல் நிலை சரிபார்ப்பு பணி
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு
ஒதுக்கீடு செய்யப்பட்டு
மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்
அமைந்துள்ள
இந்திய தேர்தல் ஆணைய
மின்னணு வாக்குப்பதிவு
இயந்திர கிடங்கில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள
BU-4858, CU-3092 மற்றும் VVPAT-3025
எண்ணிக்கையிலான மின்னணு
வாக்குப்பதிவு இயந்திரங்களை
(EVMs VVPAT முதல் நிலை சரிபார்ப்பு பணி
11:12:2025 அன்று தொடங்கப்பட உள்ளது என
கிருஷ்ணகிரி மாவட்ட
தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆப,
அவர்கள் தகவல்.
ஓசூர். டிச. 10. -
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு
செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரக
வளாகத்தில் அமைந்துள்ள
இந்திய தேர்தல் ஆணைய மின்னணு
வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள
BU-4858, CU-3092 மற்றும் VVPAT-3025
எண்ணிக்கையிலான
மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்களை (EVMs VVPAT)
முதல் நிலை சரிபார்ப்பு பணி
2025 - டிசம்பர் 11-ம் தேதி அன்று
தொடங்கப்பட உள்ளது என
கிருஷ்ணகிரி மாவட்ட
தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இஆப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்திய தேர்தல் ஆணையத்தின்
அறிவுறுத்தலின்படி,
எதிர் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல்,
2026-ஐ முன்னிட்டு
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு
ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரக
வளாகத்தில் அமைந்துள்ள
இந்திய தேர்தல் ஆணைய
மின்னணு வாக்குப்பதிவு
இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள
BU 4658, CU-3092 மற்றும் VVPAT -3025
எண்ணிக்கையிலான மின்னணு
வாக்குப்பதிவு இயந்திரங்களை
(EVM & VVPAT)
முதல் நிலை சரிபார்ப்பு பணி
(First Level Checking )
பெங்களூரு, பாரத் எலக்ட்ரானிக்ஸ்
நிறுவன பொறியாளர்களை கொண்டு
11-12-2025 அன்று காலை 9.00 மணி முதல்
தொடங்கப்பட உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி
முதல்நிலை சரிபார்ப்பு பணிக்காக
முதல் நிலை சரிபார்ப்பு வளாகம்
வெப் காஸ்டிங் மெட்டல் டிடெக்டர்
பொருத்துதல்.
சானிடைசிங் செய்தல்
போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு
தயார் நிலையில் உள்ளது.
முதல் நிலை சரிபார்ப்பு பணி
நடைபெறும் தினங்களில்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின்
சார்பாக அவர்களின் பிரதிநிதிகள்
இருவர் பெயரினை பரிந்துரைக்கும் படியும்,
பிரதிநிதிகள் இப்பணி முடியும் வரை
காலை 9.00 மணி முதல்
மாலை 7.00 மணி வரை
வைப்பறையில் ஆஜரில் இருந்து
கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பணியின் நிறைவாக
அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் தவறாது
மாதிரி வாக்குப்பதிவு
செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் நிலை சரிபார்ப்பு பணியில்
கண்டறியப்படும் பழுதான
வாக்குப்பதிவு இயந்திரங்களை
பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு
அனுப்பி வைக்கப்படும்
மேலும்
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும்
முதல் நிலை சரிபார்ப்பு பணிக்கு
முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இப்பணியின் முன்னதாக
மின்னனு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு
4-வது காலாண்டு ஆய்வு 11-12-2025 அனைத்து
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள்
முன்னிலையில் திறக்கப்பட உள்ளது என
கிருஷ்ணகிரி மாவட்ட
தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-------------------------------------------.