கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சியில்
மாநகர திமுக சார்பில்
முதலமைச்சர்
பிறந்தநாள் விழா
முன்னேற்பாடுகள் தீவிரம்
ஓசூர் மாநகர திமுக செயற்குழு கூட்டத்தில்
திமுக தலைவரும்,
தமிழ்நாடு முதலமைச்சருமான
மு.க.ஸ்டாலின்
பிறந்த நாள் விழா
சிறப்பாக கொண்டாட தீர்மானம்
மேயர் எஸ்.ஏ.சத்யா பங்கேற்பு
ஓசூர். பிப். 25. –
மாநகர திமுக
செயற்குழு கூட்டம்
ஓசூரில் நடந்த மாநகர திமுக செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவரும்,
தமிழ்நாடு முதலமைச்சருமான
மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை
முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் திமுக கொடியேற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
பிறந்த நாள் விழா
ஓசூர் மாநகர திமுக அலுவலகத்தில் நடந்த இந்த மாநகர செயற்குழு கூட்டத்துக்கு
மாநகர அவைத் தலைவர் என்.செந்தில்குமார் தலைமை வகித்தார்.
மாநகர கழக நிர்வாகிகள்
ஆர். கோபாலகிருஷ்ணன், ரவிக்குமார்,
சாந்தி தியாகராஜ் மற்றும் பகுதி கழக செயலாளர் துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேயர் எஸ்.ஏ. சத்யா
சிறப்புரை
செயற்குழு கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏவும்,
மாநகர கழக செயலாளரும்,
மேயர் எஸ்.ஏ.சத்யா பங்கேற்று சிறப்புரையாற்றி பேசும் போது,
ஓசூர் மாநகராட்சியில்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதியார்
பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட மேற்கொள்ள வேண்டிய ஆக்கப் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினார்.
தீர்மானம்
அனைத்து வார்டுகளிலும்
திமுக கொடியேற்றி
நல உதவிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
மார்ச் 1-ம் தேதி முதல் அனைத்து வார்டுகளிலும் திமுக கொடி ஏற்றி, ஏழை எளியோர்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா தொடர்ந்து நடத்தப்பட
வேண்டும்.
மாபெரும் ரத்ததானம் முகாம்
மாபெரும் பொதுக்கூட்டம்
மார்ச் 9 - ஆம் தேதி காலையில் ஆயிரக்கணக்கானோர் பங்கு பெறும் மாபெரும் ரத்த தான முகாம் மற்றும் மாலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும்
இந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட கழக பிரதிநிதிகள் மாமன்ற உறுப்பினர்கள்,
வார்டு கழகத்தின் செயலாளர்கள்,
மாநகரக் கழக அணிகளின் அமைப்பாளர்கள், கழகம் முன்னோடிகள், திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் வார்டு கழக செயலாளர் ஜான் நன்றி கூறினார்.