இந்தியாவில் கருணை இல்லம் தோற்றுவித்து
ஏழை எளிய மக்களுக்கு
சேவையாற்றிய
பாரத ரத்னா
அருட்சகோதரி
அன்னை தெரசா
ஜனவரி – 25 - 1980 –
அன்னை தெரசாவிற்கு
இந்தியாவின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதினம்
“இந்திய தபால் தலையில் உருவம் பதிக்கப்பட்ட முதலாவது நபர்
அன்னை தெரசா”.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜனவரி. 25. –
“பாரத ரத்னா” அன்னை தெரேசா
வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு
அவரின் தன்னலமற்ற சேவையை பாராட்டி
1980-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
கருணை இல்லம்
அன்னை தெரேசா (எக்னஸ் கோஞ்செ பொயாஜியூ, Agnes Gonxha Bojaxhiu) இந்தியாவில் கருணை இல்லம் (Missionaries of Charity) என்ற கிறிஸ்தவ சமூகசேவை அமைப்பை தோற்றுவித்த அல்பேனிய உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியாவார். கொல்கத்தாவின் வறிய மக்களிடையே அவர் செய்த நற்பணிகள் உலக பிரசித்தமாக்கியது.
பெற்ற விருதுகள்
* 1962 – சமாதானம் மற்றும் உலக புரிந்துணர்வுக்கான
மக்சேசே விருது
வழங்கப்பட்டது.
* 1972 – பாப்பரசர் 23ஆம் அருளப்பர்
சமாதான பரிசும்
கபிரியேல் விருதும்
வழங்கப்பட்டது.
* 1973 – டெம்லெடொன் விருது
* 1979 – அமைதிக்கான
நோபல் பரிசு
* 1980 – இந்திய அரசின்
பாரத ரத்னா பட்டம்
வழங்கப்பட்டது.
* 1981 – எய்டி ஆட்சியாளரான ஜியாண்-குளோட் டவலியரினால்
லெஜென் டி ஒணர்
(Legion d’Honneur) என்ற
கவுரவ பட்டம்
வழங்கப்பட்டது.
* 1985 – அமெரிக்காவின் அதியுயர் விருதான
விடுதலைக்கான அதிபர் பதக்கம்
வழங்கப்பட்டது.
* 1996 – கவுரவ அமெரிக்க குடிமகள் தகமை
வழங்கப்பட்டது.
* 1997 – அமெரிக்க காங்கிரஸ்
தங்கப்பதக்கம்
வழங்கப்பட்டது.
மேலும் உயிருடன் இருந்தபோதே
இந்திய தபால் தலையில் உருவம் பதிக்கப்பட்ட முதலாவது நபரும் இவரேயாவார்.
பாரத ரத்னா
இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் மரியாதைக்குரியோர் பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு.
பாரத ரத்னா என்பது
இந்தியாவின் ரத்தினம்
எனப் பொருள் தரும்.
இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது.
இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.
தற்போது பாரத ரத்னா பதக்கத்தில்
அரச மர இலையில் சூரியனின் உருவமும் "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும் அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது.
இவரைத் தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான
1987-கான் அப்துல் கபார் கானுக்கும்,
1990- நெல்சன் மண்டேலாவுக்கும்,
இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
1992ல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரரும் முதல் இந்திய கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆசாத்துக்கு முதலில் விருது வழங்கப்பட்ட போது, விருது வழங்கும் குழுவில் அவர் இருந்ததால், அவர் விருதை ஏற்க மறுத்து விட்டார். ஆனால் பின்னர் 1992 ஆம் ஆண்டு அவர் மறைவிற்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
----------------------------------------------