உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை
ஒவ்வொரு நாளும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன.
அதில் சில வரலாற்று மாற்றங்களாக மாறுகின்றன.
அதற்கு சிறந்த சான்றாக விளங்குவது
அருங்காட்சியகம்
மே 18 –
பன்னாட்டு அருங்காட்சியக நாள்
(International Museum Day, IMD)
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மே. 18. -
2025 ஆம் ஆண்டு சர்வதேச அருங்காட்சியக தினத்திற்கான கருப்பொருள்
"வேகமாக மாறிவரும் சமூகங்களில் அருங்காட்சியகங்களின் எதிர்காலம்"
"The Future of Museums in Rapidly
Changing Communities" என்பதாகும்.
விரைவான சமூக, தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு உள்ளாகும் உலகத்திற்கு அருங்காட்சியகங்கள் எவ்வாறு தகவமைத்துக் கொண்டு பங்களிக்க முடியும் என்பதை இந்த கருப்பொருள் ஆராய்கிறது.
இந்த கருப்பொருள் நவம்பர் 2024 இல் துபாயில் நடைபெற்ற ICOM பொது மாநாட்டுடன் ஒத்துப்போகிறது.
உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன.
அதில் சில வரலாற்று மாற்றங்களாக மாறுகின்றன. அதற்கு சிறந்த சான்றாக விளங்குவது அருங்காட்சியகம்.
பன்னாட்டு அருங்காட்சியக நாள் (International Museum Day, IMD) ஆண்டுதோறும் மே 18 அல்லது அதற்குக்கிட்டவான நாட்களில் பன்னாட்டு ரீதியாக நடத்தப்படும் நிகழ்வு ஆகும்.
இந்நிகழ்வுகள்
அருங்காட்சியகங்களின்
பன்னாட்டுப் பேரவையினால்
(International Council of
Museums, ICOM)
ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
அருங்காட்சியக வல்லுனர்கள் பொதுமக்களை சந்திக்கவும், அருங்காட்சியகங்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர்களுக்கு விளக்கவும் சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்களிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வைக் கொண்டு வரவும் பன்னாட்டு அருங்காட்சியக நாள் உதவுகிறது.
மனிதர்களின் வரலாறு,
கண்டுபிடிப்பு,
கலாச்சாரம்,
மரபுகள்,
பண்பாடு
போன்றவற்றை பாதுக்காத்து எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் அமைப்பதற்கு உதவியாக இருப்பது அருங்காட்சியங்கள் மட்டும் தான்.
இப்படி பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த அருங்காட்சியங்களை மக்கள் உணர்ந்துகொள்ளவும்,
அதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காவும்,
சர்வதேச பன்னாட்டு கூட்டமைப்பு,
1977ஆம் ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக தினத்தை கடைபிடிக்கத்தொடங்கியது.
-------------------------------.