கட்டூர் கிராமத்தில்
புதிய அரசு தொடக்கப்பள்ளி துவக்க விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் ஒன்றியம்
கட்டூர் கிராமத்தில்
புதிய அரசு தொடக்கப்பள்ளி துவக்க விழா
தளி எம்எல்ஏ
திரு. டி. ராமச்சந்திரன்
பங்கேற்பு
தேன்கனிக்கோட்டை
டிச. 6. -
கெலமங்கலம் அருகே உள்ள பொம்மதாத்தனூர் ஊராட்சி கெட்டுர் கிராமத்தில் புதிய அரசு தொடக்கப் பள்ளிக் கூடத்தை
தளி எம்எல்ஏ
திரு. டி. ராமச்சந்திரன்
திறந்து வைத்தார்.
அரசுப்பள்ளி திறப்பு விழாவுக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும்
கல்வித் துறை அதிகாரிகளை
முன்னாள் ஊராட்சி தலைவர் கிருஷ்ணப்பா
மேள தாளங்களோடு பட்டாசுகள் வெடித்து
எம்எல்ஏ அவர்களுக்கு பொன்னாடை, மாலை அணிவித்து வரவேற்றார்.
விழாவுக்கு
மாவட்ட தொடக்கக்
கல்வி அலுவலர் நரசிம்மன்
தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர்கள் சுதாகர் மற்றும் மாதேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக
தளி எம்எல்ஏ டி. ராமச்சந்திரன்
பங்கேற்று குத்து விளக்கேற்றிவைத்து
ரிப்பன் வெட்டி புதிய பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தார்.
தளி எம்எல்ஏ பேசியதாவது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 13 தொடக்கப்பள்ளிகள் மாநில முழுவதும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதில் தளி தொகுதியில் இரண்டு பள்ளிகள் வழங்கி இருக்கும்
தமிழக முதல்வருக்கும்
கல்வி அமைச்சருக்கும் நன்றி
தெரிவித்தார்.
அதேபோல இந்தத் தொகுதியில் ஏராளமான தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகள் ஆகவும்,
உயர்நிலைப் பள்ளிகளாகவும் ,மேல்நிலைப் பள்ளிகளாகவும் மாற்றி தரம் உயர்த்தி உள்ளேன்.
நான்கு கல்லூரிகளை கொண்டு வந்துள்ளேன்.
வேலை வாய்ப்புக்கான நமது பகுதியில் தற்போது டாட்டா செல்போன் தயாரிக்கும் கம்பெனி ஒன்று உள்ளது.
வெளி மாநிலத்திலிருந்து மக்கள் இங்கு வேலை தேடி வந்து வேலை செய்கிறார்கள்.
ஆதலால் மாணவர்கள் நன்கு கல்வி பெற்று
நல்ல திறமைசாலிகளாக உருவாக வேண்டும்.
வேலை வாய்ப்புகள் நம் பகுதியிலேயே கிடைக்கும்.
அதனால் நல்ல கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று தளி எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்.
பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் வரை அதேகிராமத்தை சேர்ந்த
திரு. நாராயணப்பா குடும்பத்தினர்
தாங்கள் புதிதாக கட்டிய வீட்டை
பள்ளிக்கூடத்திற்கு வழங்கி உள்ளனர்.
நாராயணப்பா அவர்களுக்கு தளி எம்எல்ஏ
பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்த விழாவில்
சிபிஐ மாநில
செயற்குழு உறுப்பினர்
பெரியவர் எம். லகுமையா.
கெலமங்கலம்
வட்டார மருத்துவ அலுவலர்
டாக்டர். ராஜேஷ்குமார்,
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய
ஆணையாளர்
திரு. முருகன்,
முன்னாள் துணை சேர்மன்
திரு. சீனிவாசன்,
முன்னாள் கவுன்சிலர்
திரு. ஜெயராமன்,
ஊராட்சித் தலைவர்
திரு. முரளி ,
திரு. பைரப்பா.
திரு. கோவிந்தராஜ்.
மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் பை மற்றும் பேனாக்களை தளி எம்எல்ஏ வழங்கினார்.
---------------------------------.