இலவச வீட்டமனை பட்டா...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை மற்றும்
ஓசூர் பகுதிகளில்
957 பயனாளிகளுக்கு
இலவச வீட்டமனை பட்டாக்கள்,
1,150 மகளிர்க்கு இரண்டாம் கட்டமாக
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான
வங்கி பற்று அட்டைகள் மற்றும்
4 பகுதி நேர நியாயவிலைக்கடைகள்
திறப்பு விழா
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர் திரு.அர.சக்கரபாணி
அவர்கள் பங்கேற்பு
ஓசூர். ஜனவரி. 3. –
தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் பகுதிகளில்
957 பயனாளிகளுக்கு
இலவச வீட்டமனை பட்டாக்கள்,
1,150 மகளிர்க்கு
இரண்டாம் கட்டமாக
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான
வங்கி பற்று அட்டைகளை
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர்
திரு.அர.சக்கரபாணி
அவர்கள் இன்று வழங்கினார்.
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பேட்டப்பலூர், சூளகிரி ஊராட்சி ஒன்றியம் தொட்டேகவுன்பள்ளி, கல்லுகுறுக்கி, பருவீதி, அஞ்செட்டி வட்டத்தில் ஏணிபண்டை ஆகிய 4 பகுதிநேர நியாய விலைக்கடைகளை
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர்
திரு.அர.சக்கரபாணி
அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டிலே
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான்
85,711 பயனாளிகளுக்கு
இலவசமாக பட்டாக்கள் வழங்கி
சாதனை படைக்கப்பட்டுள்ளது என
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
திரு.அர.சக்கரபாணி
அவர்கள் பெருமிதம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ராயக்கோட்டை அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும்
ஒசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸில்
நடைபெற்ற நிகழ்ச்சிகளில்,
957 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள்,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
திட்டத்தின் 2-ம் கட்டத்தின் கீழ்,
1,150 மகளிர்க்கு உரிமைத் தொகைக்கான
வங்கி பற்று அட்டைகள் வழங்கி,
பேட்டப்பனூர்,
தொட்டேகானப்பள்ளி,
கல்லுகுறுக்கி,
பருவீதி,
ஏணிபண்டை
ஆகிய 4 பகுதிநேர நியாயவிலைக் கடைகள்
மற்றும் ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம்
அருகில், ஆர்.சி.சர்ச் பகுதிகளில்
செயற்கை நீரூற்றுகள் மற்றும்
ராயக்கோட்டை பிரிவு சாலையில்
வணக்கம் ஒசூர் பெயர் பலகையை
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர்
திரு.அர.சக்கரபாணி
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.ஒய்.பிரகாஷ் (ஓசூர்),
திரு.டி.ராமச்சந்திரன் (தளி),
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா
ஆகியோர் முன்னிலையில்
இன்று (03.01.2026) திறந்து வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர்
திரு.அர.சக்கரபாணி
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர்
அவர்கள் அனைத்து தரப்பு மக்களும்
பயனடையும் வகையில் பல்வேறு
திட்டங்களை அறிவித்து
செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக மகளிர்களுக்கு
விடியல் பயண திட்டம்.
இந்தியாவிலேயே முதன் முதலாக
தமிழ்நாட்டிலே செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நகரப்பேருந்துகளில்
கட்டணமில்லாமல் மகளிர்கள்
பயணம் செய்து கொள்ளலாம்.
தற்போது இத்திட்டத்தை பல்வேறு மாநிலங்களும் செயல்படுத்தி வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
அதேப்போல், 5.09.2023 அன்று
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று
காஞ்சி மாநகரில் 1 கோடியே 14 லட்சம்
மகளிர்களுக்கு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது.
அவற்றில் விடுபட்ட மகளிர்களுக்கு
தமிழ்நாட்டிலே நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில்
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ்
நடத்தப்பட்ட 10,000 முகாம்களில்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
கோரி 29 லட்சம் மனுக்கள் வரப்பெற்றது.
அதில் தகுதியான 17 இலட்சம் மகளிர்களுக்கு
இரண்டாவது கட்டமாக
12.12.2025 அன்று வழங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் 1 கோடியே 31 லட்சம் மகளிர்க்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
இதில் விடுபட்ட தகுதிவாய்ந்த மகளிர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில்
மனு கொடுத்தால் அவற்றை பரிசீலனை செய்யப்பட்டு மகளிர் உரிமைத்தொகை
வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காலை உணவு திட்டம்
அதேப்போல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும்
20 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
1,447 அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளில் 1 முதல் 5 -ம் வகுப்பு வரை
பயிலும் 69,711 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
இல்லம் தேடி கல்வி
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ்,
35,324 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
புதுமைப்பெண் திட்டம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்
6 முதல் 12 -ம் வகுப்பு வரை
தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டமும்,
தமிழ்ப்புதல்வன் திட்டம்
மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன்
திட்டத்தின் கீழ் மாதந்தோறும்
ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும்
12 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 34,164 மாணவிகளும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 22,658 மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர்.
மேலும், கல்லூரி மாணவ, மாணவிகள்
பயனடையும் வகையில்,
05.01.2025 அன்று 10 லட்சம் மாணவ,
மாணவிகளுக்கு முதற்கட்டமாக
விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது.
கலைஞர் கனவு இல்லம் திட்டம்
கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்
கீழ் தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வீதம்
8 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது.
அவற்றில் நாளதுவரை 2 லட்சம் வீடு கட்ட
அனுமதி வழங்கப்பட்டதில்,
1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ள 1 லட்ச வீடுகள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
தாயுமானவர் திட்டம்
அதேப்போல்,
மாநிலம் முழுவதும் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 21 லட்சம் நபர்களுக்கு
குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழுநேர நியாய விலைக் கடைகள், பகுதிநேர நியாய விலைக்கடைகள் சுமார் 220 கடைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
70,000 -க்கும் மேற்பட்டவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள்
மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு
தாயுமானவர் திட்டத்தின் கீழ்,
அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று
குடிமைப் பொருட்கள்
வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ்
தமிழ்நாடு முழுவதும்
சுமார் 25 லட்சம் நபர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இலவச வீட்டுமனை பட்டாக்கள்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
நாளதுவரை 44,687 பயனாளிகளுக்கு
இலவச வீட்டுமனை பட்டாக்கள்,
சர்க்கார் / நஞ்சை / புஞ்சை மனை நிலங்களை ரயத்துமனையாக மாற்றம் செய்யப்பட்ட
வகையில் 8,811 பயனாளிகளுக்கும்,
வீட்டு வசதி வாரியத்தின் மூலம்
11,174 பயனாளிகளுக்கும்,
நகர நில வரித்திட்டத்தில்
13,073 பயனாளிகளுக்கும்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இணையவழி பட்டா
6,425 பயனாளிகளுக்கும்,
பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் இணைவழி பட்டா
1,240 பயனாளிகளுக்கும்,
வன உரிமைச் சட்டத்தின் படி,
301 பயனாளிகள் என மொத்தம்
85,711 பயனாளிகளுக்கு
இலவசமாக பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட தலைமை மருத்துவமனை
ஒசூரில் ரூ.100 கோடி மதிப்பில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
கட்டுமான பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
இம்மருத்துவமனை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட உள்ளது.
பேருந்து நிலையம்
மேலும், பேருந்து நிலைய கட்டுமான பணியும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட உள்ளது.
ஓசூர் மாநகராட்சிக்கு
பல்வேறு சாலை வசதிகளை
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்.
மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த
கர்நாடகா மாநிலத்துடன் பேசி அவற்றை செயல்படுத்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும்
ஆசிரியர்களின் இருபதாண்டுக்காலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான
"தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட
ஓய்வூதியத் திட்டம்"
என்ற புதிய திட்டம் செயல்படுத்திட
இன்று ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
இதனால் மாநிலம் முழுவதும்
23 லட்சம் அரசு ஊழியர்கள்
பயன்பெறுவார்கள்.
தொடர்ந்து,
இன்று (03.01.2026), ராயக்கோட்டை
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
நடைபெற்ற நிகழ்ச்சியில்,
தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த
547 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள்,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
திட்டத்தின் 2-ம் கட்டத்தின் கீழ்,
322 மகளிர்க்கு உரிமைத் தொகைக்கான
வங்கி பற்று அட்டைகளும்,
ஓசூர் ஆனந்த் கிரான்ட் பேலஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓசூர் பகுதியைச் சேர்ந்த
410 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள்,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
திட்டத்தின் 2-ம் கட்டத்தின் கீழ்,
650 மகளிர்க்கு உரிமைத் தொகைக்கான
வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து,
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்
பேட்டப்பனூர், சூளகிரி ஊராட்சி ஒன்றியம் தொட்டேகவுன்பள்ளி,
கல்லுகுறுக்கி, பருவீதி,
அஞ்செட்டி வட்டத்தில்
ஏணிபண்டை
ஆகிய 4 பகுதிநேர நியாய விலைக்கடைகள்
திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் 583 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.
மேலும், சமூக பொறுப்பு நிதியின் கீழ்,
ஒசூர் சார் ஆட்சியர்
அலுவலகம் அருகில்,
ஆர்.சி.சர்ச் பகுதிகளில்
செயற்கை நீரூற்றுகள்
மற்றும்
ராயக்கோட்டை பிரிவு சாலையில்
வணக்கம் ஓசூர்
பெயர் பலகை திறந்து
வைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள், மகளிர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், குழந்தைகள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வணிகப் பெருமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில்
"எல்லோருக்கும் எல்லாம்"
என்பதன் அடிப்படையில் பல்வேறு நலத்திட்டங்களை
செயல்படுத்தி வருகிறார்.
பொதுமக்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு
மற்றும்
பொங்கல் நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன் என
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர்
திரு.அர.சக்கரபாணி
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
ஓசூர் மாநகராட்சி ஆணையாளர்
திரு.முகம்மது ஷபீர் ஆலம் இ.ஆ.ப.,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்
திரு.நடராஜன்,
மண்டலக்குழு / நிலைக்குழு தலைவர்கள்
திரு.சென்னீரப்பா,
திரு.மாதோஸ்வரன்,
திரு.ரவி,
வட்டாட்சியர்கள்
திரு.குணசிவா,
செல்வி.கங்கை,
திரு.ரமேஷ்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
திரு.முருகன்
மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்
முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள்,
துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
---------------------------------.