கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
அனைத்து குடியிருப்போர்
நலச்சங்கங்களின்
கூட்டமைப்பு சார்பில்
தண்ணீர் கட்டணம்,
வீட்டு வரி,
குப்பை வரி
குறைக்க வேண்டும் என்பது உட்பட
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி
ஓசூர் மாநகராட்சி மற்றும்
தமிழக அரசுக்கு
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
30-க்கும் மேற்பட்ட குடியிருப்பு
நலச்சங்கங்கள் பங்கேற்பு
ஓசூர். ஜன. 11. –
ஓசூரில் அனைத்து குடியிருப்போர்
நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
ஓசூர் மாநகராட்சியில்
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது
அறிவித்தபடி
தண்ணீர் கட்டணம்,
வீட்டு வரி,
குப்பை வரி
குறைக்க வேண்டும் என்பது உட்பட
பல்வேறு கோரிக்கைகளை
நிறைவேற்ற வலியுறுத்தி
ஓசூர் மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஓசூர் ரயில் நிலையம் முன்பு நடந்த
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு
கூட்டமைப்பு தலைவர்
திரு. R. துரை
தலைமை வகித்தார்.
பொருளாளர்
திரு. T. சபரிபெருமாள்.
வரவேற்று பேசினார்.
செயலாளர்
திரு. K. ஸ்ரீனிவாசலு.
விளக்கவுரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு
துணை தலைவர்கள்
திரு. T. பாலகிருஷ்ணன்,
திரு. G. சம்பங்கிராமய்யா,
திருமதி. N. உஷா,
திரு. A. கருணாநிதி,
திரு. P. ராமமூர்த்தி,
திரு. J. வெங்கடேஷ்,
திருமதி. R. ரோகிணி,
இணை செயலாளர்கள்
திரு. J. சிவகுமார்,
திரு. P. பொன்னுதுரை,
திரு. R. வெங்கடேஷ்,
திரு. M. ராஜு,
திரு. M.M. ராஜு,
திருமதி. R. ராணி,
திருமதி. M. கயல்விழி,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
கூட்டமைப்பு தலைவர்
திரு. R. துரை.
மற்றும் நிர்வாகிகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி
உரையாற்றினார்கள்.
கோரிக்கைகள்
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
ஓசூர் மாநகராட்சியில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அறிவித்த தண்ணீர் கட்டணம், வீட்டு வரி, குப்பை வரி அமைச்சர் அறிவித்தபடி குறைக்க வேண்டும்.
அனைத்து பகுதிகளுக்கும் கழிவுநீர் கால்வாய்,
சாலைகள், ஒகேனக்கல் குடிநீர் வசதி, செய்து தரவேண்டும்.
தமிழக அரசு அறிவித்தபடி பட்டா கேட்டு மனு அளித்தவர்களுக்கு தேர்தல் வரை காத்திராமல் விடுபட்டவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கவேண்டும்.
நாகர்கோயில் ரயிலில் எளிய மக்கள் பயன்படுத்தி வரும் ரயில் பெட்டிகளை குறைக்காமல் AC பெட்டிகள் அதிகரிக்காமல் பாதுகாத்திட வேண்டும்.
ஓசூரில் தெருநாய்கள் தொல்லைகள்
நீங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஓசூர் பகுதியில் இயங்கி வரும்
அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள
காமராஜர் கல்வி வளர்ச்சி சங்கம்,
வியாபாரிகள் சங்கம்,
தென்றல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம்,
பயணிகள் மேம்பாட்டு சங்கம்,
தமிழ் நாடு காது கேளாதோர் சங்கம்,
டைட்டான் டவுன்ஷிப் குடியிருப்போர் நலச்சங்கம்,
உட்பட 30-க்கும் மேற்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்களின் நிர்வாகிகள்
கலந்து கொண்டனர்.
---------------------------------------.