SIR - விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி மாவட்டம்
வேப்பன ஹள்ளி சட்டமன்ற தொகுதி
SIR படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து
வாக்குச்சாவடி நிலை அலுவலாிடம் (BLO)
ஒப்படைக்க வாக்காளர்களுக்கு
விழிப்புணர்வு பேரணி
ஓசூர். நவ. 28. –
கிருஷ்ணகிாி மாவட்ட
தோ்தல் அலுவலா் மற்றும்
மாவட்ட ஆட்சித் தலைவா்
அவா்களின் அறிவுரைக்கிணங்க
வாக்காளா் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தம் 2026
வரைவு வாக்காளா் பட்டியல் தயாாிக்கும்
பொருட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட
SIR படிவங்களை
உடனடியாக பூர்த்தி செய்து
வாக்குச்சாவடி நிலை அலுவலாிடம் (BLO)
ஒப்படைக்க வாக்காளர்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
விழிப்புணா்வு பேரணி (Rally),
நடைபெற்றது.
சூளகிாி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
சூளகிாி ஊராட்சியில்
பழைய காவல் நிலையம் முன்பு
தொடங்கிய இந்த பேரணிக்கு
மாவட்ட வழங்கல் அலுவலா்/
வேப்பன ஹள்ளி சட்டமன்ற தொகுதி
தேர்தல் அலுவலர்
திருமதி. கீதாராணி
அவர்கள் தலைமை வகித்தார்.
உதவி இயக்குநா்(தணிக்கை),
சூளகிரி வட்டாட்சியா்,
வட்டார வளா்ச்சி அலுவலா்கள்,
திருமதி. கலா
திரு. கார்த்திக்
மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், காவல்துறையினர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரணியில்
பெருமாள் மணிமேகலை
பொறியியல் கல்லூாி மாணவா்கள்
பங்கேற்று
விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி,
விழிப்புணர்வு முழக்கங்களை
எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.
இந்த பேரணி
சூளகிாி பழைய காவல் நிலையம்
முன்பு புறப்பட்டு
சூளகிரி பிரதான நகர சாலைகளில் பயணித்து
இறுதியில் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில்
நிறைவு பெற்றது.
------------------------------------.