கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
மலையில் அமைந்துள்ள
1000 ஆண்டுகள் பழமையான
மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோயில்
வரலாற்று சிறப்புமிக்க
ஒசூர் மரகதாம்பாள்
உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோயில்
தேரோட்டத்தில்
ஒரு லட்சம் பக்தர்கள்
சுவாமி தரிசனம்
3 மாநில பக்தர்கள் பங்கேற்பு
ஒசூர். மார்ச். 15. -
ஒசூரில்
மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோயில்
தேரோட்டம்
தேரோட்டத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
.
1000 ஆண்டுகள் பழமையான
கோயில்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூரில் ஆயிரம் ஆண்டுகள்
பழமையான
பிரசித்தி பெற்ற
ஸ்ரீமரகதாம்பிகை உடனுறை
ஸ்ரீசந்திரசூடேஸ்வர சுவாமி
மலைக்கோவில் அமைந்துள்ளது.
தேர்த்திருவிழா
இந்த கோயிலில் ஆண்டுதோறும்
மாசி மாதத்தில்
தேர்த்திருவிழா சிறப்பாக
நடைபெறுவது வழக்கம்.
பால்கம்பம்
நடப்பாண்டில்
தேர்த்திருவிழா
முன்னிட்டு
கடந்த பிப்ரவரி 10-ம் தேதி
பால் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன்
தேர் கட்டும் பணிகள்
தொடங்கியது.
திருக்கொடியேற்றம்
அதைத்தொடர்ந்து மார்ச் 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது.
இந்த தேர்த்திருவிழாவின்
சிறப்பு நிகழ்வான
பிரம்ஹ தேரோட்டம்
மார்ச் 14-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
கல்யாண சூடேஸ்வரர் கோயில்
மலைக்கோயிலின் அடிவாரத்தில்
உள்ள தேர்ப்பேட்டையில்
அமைந்துள்ள கல்யாண சூடேஸ்வரர்
கோயில் முன்பு இந்த தேரோட்டத்தை காலை 10 மணிக்கு
மாவட்ட கலெக்டர்
தினேஷ்குமார்,
ஒசூர் மாநகர
மேயர் சத்யா,
சப் கலெக்டர்
பிரியங்கா,
எஸ்.பி. தங்கதுரை,
மாநகர ஆணையாளர்
மாரி செல்வி,
துணை மேயர்
ஆனந்தய்யா,
மாநகர பொது சுகாதார
குழுத் தலைவர்
மாதேஸ்வரன்,
பாஜக முன்னாள்
மாவட்ட தலைவர்
நாகராஜ்
ஆகியோர் தேர் வடம்
பிடித்து இழுத்து
தேரோட்டத்தை
தொடங்கி வைத்தனர்.
தேர்ப்பேட்டையில் 4 மாட வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட
மூன்று தேர்களில் முறையே
விநாயகர்,
சந்திரசூடேஸ்வரர்
மரகதாம்பாள்,
ஆகிய சுவாமிகள் எழுந்தருளி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தேரோட்டத்தில்
முதலில்
சிறிய தேரில்
விநாயகர்,
அதனைத் தொடர்ந்து
சந்திரசூடேஸ்வரர்,
மரகதாம்பாள் பெரிய தேரிலும்,
அதன் பின்னர்
3 வது தேரில்
மரகதாம்பாள் அம்மன்
தனியாகவும் என
3 தேர்களில் உற்சவ மூர்த்திகள், மேளதாளங்கள் முழங்க தேர்ப்பேட்டை
4 மாட வீதிகளில் பவனி வந்தனர்.
அப்போது, தேருக்கு முன்பாக
மகளிர் சிவ பக்தைகள்
கோலாட்டம் ஆடியபடி சென்றது,
அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
இந்த தேரோட்டத்தின் போது,
சிவ சிவ மஹாதேவா,
சம்போ சிவா மஹாதேவா,
ஹர ஹர மஹாதேவா,
என கோஷம் முழங்கியபடி
பக்தர்கள் தேர் வடம் பிடித்து
இழுத்துச் சென்றனர்.
முன்னதாக உற்வசமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும்
சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அன்னதானம்
தேரோட்டத்தை முன்னிட்டு
ஒசூர் நகர் முழுவதும் வீதிக்கு வீதி,
பல்வேறு தொண்டு அமைப்புகள்
மற்றும் பக்தர்கள் சார்பில்
பந்தல் அமைக்கப்பட்டு,
பக்தர்களுக்கு
குடிநீர், மோர், சுண்டல், பழங்கள், பானகம், இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேர்த்திருவிழாவை யொட்டி,
ஒசூர் நகரமே விழாக்கோலம்
பூண்டிருந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
விழாவையொட்டி,
ஒசூர் டிஎஸ்பி(பொறுப்பு)
சிந்து தலைமையில்
500-க்கும் மேற்பட்ட போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
100-க்கும் மேற்பட்ட
சிசிடிவி கேமராக்கள்,
உயர் கோபுர கேமராக்கள்,
சுவாமியை தரிசிக்க
ஒரு வழியும்
தரிசித்த பின்
வெளியேற ஒரு வழியும்
என
போலீசார் பாதுகாப்பு
ஏற்பாடுகளை
சிறப்பாக செய்திருந்தனர்.
ஒசூர் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள்
காலை முதல் மாலை வரை
சுகாதாரப் பணியில்
ஓய்வின்றி பணியாற்றினர்.
இந்த தேரோட்டம்
நிகழ்ச்சியில்
தேரோட்டத்தை தொடங்கி வைக்க வருகை தந்த
மாவட்ட கலெக்டர்
தினேஷ் குமார்,
எம்.பி. கோபிநாத்,
மேயர் சத்யா,
ஆகியோரை
தேர்த்திருவிழா
கமிட்டித் தலைவரும்,
முன்னாள் எம்எல்ஏவுமான
கே.ஏ. மனோகரன்,
மாலை மரியாதையுடன்
வரவேற்றார்.
தேர்த்திருவிழா ஏற்பாடுகளை
தேர்த்திருவிழா
கமிட்டித் தலைவரும்,
முன்னாள் எம்எல்ஏவுமான
கே.ஏ. மனோகரன்,
மற்றும் உறுப்பினர்கள்
மற்றும்
இந்து சமய அறநிலையத்துறை
உதவி ஆணையர்
இராமுவேல்,
செயல் அலுவலர்
சாமி துரை,
சர்வசாதகம்
வாச்சீஸ்வர குருக்கள்,
அர்ச்சகர்,
மற்றும் கோயில் பணியாளர்கள்
ஆகியோர்
சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த தேர்த்திருவிழாவில்
திமுக மாநில சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர்
விஜயகுமார்,
பொதுக்குழு உறுப்பினர்
சீனிவாசன்,
முன்னாள் நகராட்சி
கவுன்சிலர் நந்தகுமார்,
குவாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்
சம்பங்கி,
மது,
பிரேம்நாத்,
சீனிவாச மூர்த்தி,
ஆனந்த்குமார்,
மண்டலக் குழு தலைவர்கள்,
நிலைகுழுத் தலைவர்கள்,
மாமன்ற உறுப்பினர்கள்,
பானு டூல்ஸ் சரவணன்,
அம்மன் பேக்கரி அருண்,
சிறுபான்மையினர் பிரிவு
இக்கிரம் அகமது, ராஜா, சுமன், கஜேந்திர மூர்த்தி,
கோபாலகிருஷ்ணன்,
ராமு, சக்திவேல்,
முருகன், பிரவீன்குமார்,
கிரண்குமார்,
தினேஷ்குமார்
உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
3 மாநில பக்தர்கள் பங்கேற்பு
இந்த தேர்த்திருவிழாவில்
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த தேர்த்திருவிழா
தேரோட்டத்தை
முன்னிட்டு
தெப்ப உற்சவம் உள்ளிட்ட
சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் மார்ச் 27-ம் தேதி வரை நடக்கிறது.
-------------------------------------------.