ஓசூர் மாநகராட்சியில்
திருக்குறள் உலக சாதனை விருது வழங்கும் விழா
1330 திருக்குறளை 27 மணி நேரத்திற்குள்
159 நபர்கள் பன்மொழிகளில்
எழுதி உலக சாதனை
மேயர் பங்கேற்பு
ஓசூர். ஜனவரி. 25. -
திருக்குறள் உலக சாதனை விருது
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் மாநகராட்சியில்
திருக்குறள் 7-வது குரூப் உலக சாதனை விருது வழங்கும் விழா நடைபெற்றது.
பெங்களுரு ஷியாம்ஸ் ஆர்ட் அண்ட் கிராஃப்ட் அகாடமி
மற்றும்
பாண்டிச்சேரி ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம்
ஆகியவை இணைந்து நடத்திய
திருக்குறள் உலக சாதனை
நிகழ்வு நடந்தது.
தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு
குமரி முனையில் இருக்கும் கன்னியாகுமரி திருவள்ளுவர் திருஉருவச் சிலைக்கு வெள்ளி விழா கொண்டாடிய தமிழக அரசை பாராட்டும் விதமாகவும்,
திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் பெருமை சேர்க்கும் விதமாகவும்,
1330 திருக்குறளை 27 மணி நேரத்திற்குள் 159 நபர்கள் பன்மொழிகளில் எழுதி உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா
இந்த உலக சாதனை விருது வழங்கும் விழா ஓசூரில் சாய் சக்தி மஹாலில் நடைபெற்றது.
விழாவின் நோக்கவுரையை
செல்வி தக்க்ஷித்தா
வழங்கினார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா பங்கேற்று
திருவள்ளுவர் ஓவியம்
திறந்து வைத்து,
சிறப்புரையாற்றினார்.
இந்த விழாவில் ஷியாம்ஸ் ஆர்ட் அண்ட் கிராஃப்ட் அகாடமி நிறுவனரும், உலக சாதனையாளருமான
முனைவர் சியாமளா சந்திப்
மற்றும் ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத் தலைவரும், உலக சாதனையாளருமான
முனைவர் வெங்கடேசன்
ஆகியோர் முன்னிலையில்
மேயர் சத்யா, சாதனையாளர்களை பாராட்டி
உலக சாதனை விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியை
உலக சாதனையாளர் லாவண்யா
சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
விழாவின் இறுதியாக
சந்திப்ராஜன்
நன்றியுரை வழங்கினார்.