குடியரசு தினம்
333 கிராம ஊராட்சிகளிலும்
கிராமசபை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
குடியரசு தினம் (26.01.2026) அன்று
333 கிராம ஊராட்சிகளிலும்
கிராமசபைக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜன. 24. –
குடியரசு தினம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
குடியரசு தினம் (26.01.2026) அன்று
333 கிராம ஊராட்சிகளிலும்
கிராமசபைக் கூட்டம்
நடைபெறவுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
333 கிராம ஊராட்சிகளிலும்
வருகின்ற 26.01.2026 குடியரசு தினத்தன்று திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில்
கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சி இயக்கம், சென்னை
அவர்களிடமிருந்து வரப்பெற்ற
கூட்டப் பொருட்கள் குறித்து
கிராம சபையில் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் கிராம சபை கூட்டத்தினை
மேற்பார்வையிட ஊராட்சிகள் அளவில்
தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
மேற்படி கிராம சபா கூட்டம்
சிறப்பாக நடைபெற
அனைத்து தனி அலுவலர்/
வட்டாரவளர்ச்சி அலுவலர்கள்
மூலமாக தக்க ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதனைக் கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான அலுவலர்களை ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எனவே அனைத்து பொதுமக்களும்
கிராம சபைக் கூட்டத்தில்
கலந்துகொள்ளுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
--------------------------------.