உலகின்
வான், வின்வெளியியலில்
வெற்றி பெற்ற
முதல் பெண் வானியலாளர்
ஜில் கார்னெல் டார்ட்டர்
ஜனவரி – 16- 1944 -
வானியலாளர்
ஜில் கார்னெல் டார்ட்டர்
(Jill Cornell Tarter)
81 -வது பிறந்த தினம்
'2004 இல் உலகின் 100 அரிய தாக்கம் விளைவித்த அறிஞர்களில் ஒருவராக டைம் (Time) இதழால் பாராட்டப்பட்டுள்ளார்."
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்
ஓசூர். ஜனவரி. 16. –
வானியலாளர்
ஜில் கார்னெல் டார்ட்டர்,
சேதி ஆய்வு நிறுவனத்தின் மேனாள் இயக்குநர், சேதியின் பெர்னார்டு எம். ஆலிவர் கட்டில் பேராசிரியர்.
வானியலில் முதுநிலை, முனைவர் பட்டங்கள் இவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இயற்பியலில் பட்டம் பயின்றார். ப்ர்க்கெலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இவர் வானியலில் முதுநிலை, முனைவர் பட்டங்களைப் பெற்றார்.
வானியல் பணி - இவர் புறவெளி உயிரினத் தேற்றம் சார்ந்த பல அறிவியல் திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் பட்டம் படிக்கும் மாணவராக இருந்தபோதே SERENDIP எனும் புறவெளி உயிரினம் வெளியிடும் கதிர்வீச்சு ஆய்வுத் திட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இவர் backronym எனும்
"அருகாமையில் உள்ள அறிதிற மக்கள் வெளியிட்ட புறவெளி கதிர்வீச்சு உமிழ்வுத் தேட்டம்."
எனும் திட்டத்தை உருவாக்கினார்.
நாசாவின் உயர் பிரிதிற நுண்ணலை அளக்கை (HRMS) திட்டப் பொறுப்பு அறிவியலாளராகப் பணி இவர் 1992 இல் நாசாவின் உயர் பிரிதிற நுண்ணலை அளக்கை (HRMS) திட்டப் பொறுப்பு அறிவியலாளராகப் பணிபுரிந்துள்ளார்.மேலும் 1993 இலும் பின்னரும் சேதி நிறுவனத்தின் மீளாக்க உயர் பிரிதிற நுண்ணலை அளக்கை சார்ந்த போனிக்சு சேதி திட்ட இயக்குநராக இருந்துள்ளார்.
இவர் 2002 இல் HabCat சார்ந்த மார்கரெட் டர்ன்புல்லுடன் இணைந்து போனிக்சு திட்டத்தின் முதன்மையான பகுதியை வடிவமைத்துள்ளார். இவர் பல தொழில்நுட்பக் கட்டுரைகளை வெளியிட்டதோடு, பல விரிவுரைகளையும் உகந்த அறிவியல் கல்வியின் தேவை பற்றியும் புறவெளி அறிதிற உயிரினத் தேட்டம் பற்றியும் விரிவுரை ஆற்றியுள்ளார்.
பழுப்புக் குறுமீன் இவர்
நீரக பிணைவை
தொடரவல்ல அளவு
பொருண்மையற்ற விண்மீன்களை வகைப்படுத்த,
பழுப்புக் குறுமீன்
என்ற சொல்லை உருவாக்கியவர் ஆவார். இவர் புறவெளி உயிரினத் தேட்டத்தில் 35 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு, 2012 இல் ஓய்வு பெற்றார்.
இவரது 2011 உரை Strums: 50 Years of Man in Space என்ற நூலில் வெளியிடப்பட்டுள்ளது.
இவர் Curiosity Streamஅறிவுரைக்
குழுவின் உறுப்பினராவார்.
இவரின் வான் உயிரியல் ஆய்வும் பெண் அறிவியலாளராகப் பெற்ற வெற்றிகளும் தகைமைகளும் இவருக்குப் பல அறிவியல் நிறுவனங்களில் இருந்து பல விருதுகளை ஈட்டித் தந்தன.
வாழ்நாள் வெற்றிக்காக விருது
இவர் 1989 இல் வான், வின்வெளியியலில் ஒரு பெண் அறிவியலாளராகப் பெற்ற வாழ்நாள் வெற்றிக்காக விருது பெற்றார்.
நாசா - வின்
இரண்டு விருதுகள்
நாசாவில்
இருந்து
பொதுச்சேவைக்காக இருமுறை விருதுகள் பெற்றுள்ளார்.
அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் உறுப்பினர்
இவர் 2002 இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 2003 இல் கலிபோர்னியா அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் ஆனார்.
ஆல்டர்
கோளரங்க
விருது இவர்
2003 இல்
விண்வெளி அறிவியல்
விருதாக,
ஆல்டர் கோளரங்க
விருதைப் பெற்றார்.
தொழில்நுட்ப விழா விருது
இவர் 2001 இல் டேல்லூரைடு தொழில்நுட்ப விழா விருதைப் பெற்றார்.
உலகின் 100 அறிஞர்களில் ஒருவர் இவர் 2004 இல் உலகின் 100 அரிய தாக்கம் விளைவித்த அறிஞர்களில் ஒருவராக டைம் (Time) இதழால் பாராட்டப்பட்டுள்ளார்..
அறிவியல் பரப்புரைக்கான
வியன்விழா விருது இவர் 2005 இல் மக்கள் அறிவியல் பரப்பலுக்காக, கார்ல் சாகனின் அறிவியல் பரப்புரைக்கான வியன்விழா விருதைப் பெற்றுள்ளார்.