மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
ஊரக வளர்ச்சித் துறை சார்பாக,
சமத்துவ பொங்கல் விழா.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம்,
கட்டிகானப்பள்ளி ஊராட்சி,
லிட்டில் ஹாட்ஸ் மனநல காப்பகம்,
மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக
இயங்கி வரும் அவசர சிகிச்சை
மீட்பு மையம் ஆகிய இடங்களில்
சமத்துவ பொங்கல் விழா
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி. ஜன. 14. –
லிட்டில் ஹாட்ஸ் மனநல காப்பகத்தில்
சமத்துவ பொங்கல்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி ஊராட்சி, காட்டிநாயனப்பள்ளியில் இயங்கி வரும்
லிட்டில் ஹாட்ஸ் மனநல காப்பகம்
மற்றும்
கிருஷ்ணகிரி நகராட்சி,
பழைய அரசு மருத்துவமனை
மருத்துவக் கல்லூரி வளாகத்தில்
மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக
இயங்கி வரும் அவசர சிகிச்சை மீட்பு
மையம் ஆகிய இடங்களில்
சமத்துவ பொங்கல் விழாவை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (14.01.2026)
துவக்கி வைத்தார்.
பொங்கல்
மாட்டுப்பொங்கல்
காணும் பொங்கல்
தமிழர் பண்டிகையில்
மிகவும் முக்கியமான பண்டிகை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை.
விவசாயிகள் ஆண்டு முழுவதும் பயிர் செய்து,
அறுவடை செய்த பொருட்களை கொண்டு
பொங்கல் செய்து இயற்கை தெய்வங்களை வணங்குவதும்,
விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட
காளைகளை போற்றி மாட்டுப்பொங்கலும்,
கன்றுகளை போற்றும் விதமாக
காணும் பொங்கலும்
கொண்டாடி வருகிறோம்.
அதனடிப்படையில் சமத்துவம் மற்றும்
சகோதரத்துவத்தை ஒற்றுமையும்
பேணி பாதுகாக்கும் வகையில்
தமிழக அரசு
சமத்துவம் மற்றும்
சுகாதார பொங்கல்
தமிழகம் முழவதும்
கொண்டாடப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
இன்று (14.01.2026)
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
சார்பாக,
காட்டிநாயனப்பள்ளியில் இயங்கி வரும்
லிட்டில் ஹாட்ஸ் மனநல காப்பகம்,
ஊரக வளர்ச்சித் துறை
சார்பாக,
கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் மற்றும்
கிருஷ்ணகிரி நகராட்சி,
பழைய அரசு மருத்துவமனை
மருத்துவக் கல்லூரி வளாகத்தில்
இயங்கி வரும்
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான
அவசர சிகிச்சை மீட்பு மையத்தில்
சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில்
கோலப்போட்டி,
உரி அடித்தல்,
கயிறு இழுத்தல்,
இசை நாற்காலி
போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மேலும்,
புதுப்பானை, பொங்கல் வைத்து
வழிபாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் பல்வேறு போட்டிகளில்
வெற்றிபெற்றவர்களுக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான
அவசர சிகிச்சை மீட்பு மையத்தில்
ஆறு மாதமாக சிகிச்சை பெற்று
தற்போது குணமடைந்த
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த
திரு.போலக்குமார் (வயது -28)
என்பவரை அவருடைய சொந்த ஊருக்கு
அனுப்பி வைப்பதற்கான
ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில்,
ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்
திருமதி.கவிதா,
உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)
திரு.மகாதேவன்,
மாற்றுத்திறனாளி நல அலுவலர்
திரு.முருகேசன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
திரு.சு.மோகன்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திரு.உமாசங்கர்,
திரு.சிவபிரகாசம்,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு.ராஜூ,
மருத்துவ அலுவலர்
மரு.மது,
உள்ளிருப்பு மருத்துவர்
மரு.கிருபாவதி,
மன நலத்துறை தலைவர்
மரு.வாணிஸ்ரீ,
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
திருமதி.காயத்ரி கோவிந்தராஜ்,
ஊராட்சி செயலாளர்
திரு.ஜெயக்குமார்,
தொண்டு நிறுவன இயக்குநர்
திரு.ஜோசப் ஸ்டான்லி,
திட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு.ஜலாலுதீன்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
-----------------------------------------.