ஓசூர் ஜுஜுவாடி
அரசு மேல்நிலைப்பள்ளியில்
குழந்தைகள் தின விழா
2000 மாணவர்களுக்கு அறுசுவை உணவு
ஓசூர் ஜுஜுவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் 2-வது வார்டு கவுன்சிலரும், மாநகர கல்விக்குழு தலைவருமான ஸ்ரீதர், முன்னாள் பிரதமர் நேரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஓசூர். நவ. 14 –
By Jothi Ravisugumar
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜுஜுவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி 2-வது வார்டில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இங்கு தலைமையாசிரியர் உட்பட 40 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்தப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 2000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
குழந்தைகள் தின விழா
ஜுஜுவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த குழந்தைகள் தினவிழாவுக்கு தலைமையாசிரியர் நர்மதா தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக ஓசூர் மாநகராட்சி 2-வது வார்டு கவுன்சிலரும், கல்விக் குழு தலைவருமான ஸ்ரீதர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக முன்னாள் பிரதமர் நேரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
2000 மாணவர்களுக்கு
அறுசுவை உணவு
இந்த குழந்தைகள் தின விழாவில்
மாநகர கல்விக் குழு தலைவர் ஸ்ரீதர் பிறந்த நாளையொட்டி
2ஆயிரம் மாணவ,மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும்
பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நர்மதா
செய்திருந்தார்.