ஜோதி தமிழ்
செய்திகள்
இணைய இதழ்
மலர் - 1. இதழ்கள் - 277a
கிருஷ்ணகிரி, ஓசூர்
கல்வி மாவட்டங்களில்
16 பள்ளிகளில்
ரூ.4.44 கோடி மதிப்பில்
ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும்
கற்றல் மையங்கள் திறப்பு விழா
News editor - Jothi Ravisugumar,M.A.
கல்வி மாவட்டங்களில்
16 பள்ளிகளில்
ரூ.4.44 கோடி மதிப்பில்
ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும்
கற்றல் மையங்கள் திறப்பு விழா
News editor - Jothi Ravisugumar,M.A.
கிருஷ்ணகிரி, ஓசூர்
கல்வி மாவட்டங்களில் 16 பள்ளிகளில்
ரூ.4.44 கோடி மதிப்பில்
ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும்
கற்றல் மையங்கள் திறப்பு விழா
பேடரப்பள்ளி அரசுப்பள்ளிக்கு
2 கற்றல் மையங்கள்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யா மொழி
பங்கேற்பு
படம் - விளக்கம் - பதினாறு பள்ளிகளில் ஒன்றான பேடரப்பள்ளி மாநகராட்சி பள்ளிக்கு ஸ்டெம் கண்டுபிடிப்பு - கற்றல் மைய சான்றிதழ் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யா மொழி -பள்ளி தலைமை ஆசிரியர்
பொன்நாகேஷ் அவர்களிடம் வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சியர்தினேஷ்குமார் IAS,
MLA பிரகாஷ், மேயர் S.A. சத்யா,
மாநில தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ்,
துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் பலர் உள்ளனர்.
-----------------------------------------------------.
ஓசூர். ஜுன். 28. –
ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும்
கற்றல் மையங்கள் திறப்பு
(Stem Innovtion and Learning Center)
கிருஷ்ணகிரி - ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 16 நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளிகல்வித்துறை அமைச்சகத்துடன் இணைந்து
அமெரிக்க - இந்தியா அறக்கட்டளை மற்றும் கேட்டர் பில்லர் நிறுவனம் சார்பில் கட்டித்தரப்பட்டுள்ள
16 ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யா மொழி திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 16 பள்ளிகளில் ரூ. 4.44 கோடி மதிப்பில் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களின் திறப்பு விழா ஓசூர் மாநகராட்சியில் உள்ள சீதாராம் மேடு, அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் ஜுன் 27-ம் தேதியன்று
நடைபெற்றது.
இந்த விழாவில்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யா மொழி
தலைமை வகித்து
Stem கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்களை
திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து
16 பள்ளி தலைமையாசிரியர்களிடம்
ஸ்டெம் கண்டுபிடிப்பு - கற்றல் மைய சான்றிதழ்களை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யா மொழி
வழங்கினார்
மாவட்ட ஆட்சியர்
தினேஷ்குமார். IAS.
ஓசூர் எம்எல்ஏ
ஒய். பிரகாஷ்,
ஓசூர் மேயர்
S.A. சத்யா,
மாநில தொடக்கக்கல்வி இயக்குனர்
நரேஷ்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் (பொறுப்பு)
முனிராஜ்
வரவேற்புரை ஆற்றினார்.
படம் விளக்கம் - பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள
ஸ்டெம் கண்டுபிடிப்பு - கற்றல் மையத்தில்
அமைச்சர் வழங்கிய சான்றிதழுடன்
தலைமையாசிரியர் பொன்நாகேஷ்
மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளனர்
----------------------------------.
விழாவில் அமைச்சர் பேசியதாவது,
கல்வியும், சுகாதாரமும் தனது இரு கண்களாக
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
கருதி வருகிறார்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ. 65கோடி ஒதுக்கீடு செய்து 1,686 பள்ளிக் கூடங்களில் உள்ள திறன்மிகு வகுப்பறைகள் மேம்படுத்தப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்வியில் முன்னேறிய மாவட்டமாக மாறி விட்டது.
ஆசிரியர்கள் நிறைய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் 83 ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் தமிழ்நாட்டில் 33 மையங்களில் 16 மையங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்கள் மூலம் அறிவியல்,தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் நேரடி விசாரணை அடிப்படையிலான கற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பள்ளி அமைச்சகத்துடன் இணைந்து அமெரிக்க – இந்தியா அறக்கட்டளை இந்த மையங்களை அமைத்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
16 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் மையங்களில் தலா ஒரு பள்ளிக்கு சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களுக்கு சம்பந்தப்பட்ட புதுப்புது கற்றல் உபகரணங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
இந்த விழாவில்
மாநகராட்சி துணை மேயர்
ஆனந்தய்யா,
கல்வி அலுவலர்கள்,
தலைமைஆசிரியர்கள்,
மாணவ, மாணவிகள்
கலந்து கொண்டனர்.
பதினாறு பள்ளிகளில் ஒன்றான
பேடரப்பள்ளி மாநகராட்சி பள்ளிக்கு
கற்றல் மைய சான்றிதழ் -
மாண்புமிகு கல்வி அமைச்சர்,
பள்ளி தலைமை ஆசிரியர்
பொன்நாகேஷ்
அவர்களிடம் வழங்கினார்.
இரண்டு கற்றல் மையங்கள்
ஓசூர் மாநகராட்சி மூன்றாவது வார்டில் அமைந்துள்ள பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில்
ரூ.20 லட்சம் மதிப்பில் இரண்டு கற்றல் மையங்கள் கட்டித் தரப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் பொன்நாகேஷ் தலைமையில்
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மொத்தம்
40 பேர் தனியார் பள்ளி பஸ்ஸில்
காலை 11 மணி அளவில்
திறப்பு விழா இடத்துக்குச் சென்று
விழாவில் கலந்து கொண்டனர்.
------------------------------------------.