உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
அவமதிப்பு சம்பவத்துக்கு
இந்திய குடியரசு கட்சி
தமிழ்நாடு மாநிலத் தலைவர் கண்டனம்.
நவம்பர்- 23-ம் தேதி அம்பேத்கர் பேரன்
எஸ்வந்த் பீமாராவ் தமிழகம் வருகை
வேலூரில் சிறப்பான வரவேற்பு
பள்ளிகொண்டா முதல் சென்னை வரை
அம்பேத்கர் சட்டப்பாதுகாப்பு ரதயாத்திரை
தலித் மக்களுக்கு தனி ஆணையம்
அமைக்க கோரிக்கை
ராணிப்பேட்டை. அக்.11. –
இந்திய குடியரசு கட்சி
தமிழ்நாடு மாநிலத் தலைவர்
கண்டனம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில்
இந்திய குடியரசு கட்சியின்
மாநிலத் தலைவர்
அனந்தலை தங்கராஜ்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
சமீபத்தில்
உச்ச நீதிமன்ற
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், செருப்பை வீசினார்.
இந்த சம்பவம் அக்டோபர் 6-ம் தேதி அன்று நடைபெற்றது.
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், கஜுராஹோவிலுள்ள
ஜவாரி கோயிலில் விஷ்ணு சிலையின் அமைப்பை மீட்டெடுக்கக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தள்ளுபடி செய்தார்.
அப்போது அவர், “சிலையை மீட்டெடுக்கக் கோரி கடவுளிடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறினார்.
இதன் காரணமாகவே அவர் செருப்பை வீசியுள்ளார்.
இந்த சம்பவம் இந்தியாவிற்கு அசிங்கம், கேவலம்.
அகில உலகமே அதிர்ந்து போயிருக்கிறது.
இதனை
இந்திய குடியரசு கட்சி
வன்மையாக கண்டிக்கிறது
என்றார்.
அவரை கைது செய்தால் மட்டுமே போதாது. ஜாமீனில் வெளிவராதபடிக்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். எனக் கேட்டுக்கொண்டார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லை. மேலும் சம்பந்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் குறைவாகவே உள்ளனர்.
என சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து தலித் மக்கள் பாதுகாப்பு குறித்து பேசிய அனந்தலை தங்கராஜ்…
தலித் மக்களுக்கு தனி ஆணையம்
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 28 சாதிய படுகொலைகள் உட்பட பல வன்கொடுமைகள் நடந்துள்ளன என்றார்.
அம்பேத்கர் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் குற்றம்சாட்டிய அவர்,
தலித் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தனி ஆணையம் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.
சமீபத்தில் தவெக கட்சியின் சார்பில் நடைபெற்ற கரூர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 20 பேர் கட்சிக்காரர்கள், மற்றவர்கள் ரசிகர்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லி உதவி செய்ய வேண்டிய
அக்கட்சியின் தலைவர் விஜய் ஒளிந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.
இளைஞர்கள் நடிகர்களின் பின்னால் போவதை விட்டு சிந்தித்து செயல்பட வேண்டும்
என கேட்டுக் கொண்டார்.
வரும் நவம்பர் 23-ம் தேதி
அம்பேத்கரின் பேரன்
எஸ்வந்த் பீமாராவ்
தமிழகம் வருவதாகவும்,
அவருக்கு வேலூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வேலூர் பள்ளிகொண்டாவில் உள்ள கிருஷ்ணசாமியின் நினைவிடத்திலிருந்து
அம்பேத்கர் சட்டப்பாதுகாப்பு
ரத யாத்திரை
தொடங்கி சென்னை வரை செல்ல இருப்பதாவும், அனந்தலை தங்கராஜ் தெரிவித்தார்.
இந்த பேட்டியின் போது
மாநில துணைத்தலைவர்
சம்பத்குமார்,
வாலாஜா நகர தலைவர்
சஞ்சீவி,
வாலாஜா நகரச் செயலாளர்
சித்தார்த்தன்,
வாலாஜா ஒன்றிய தலைவர்
ராமநாதன்,
மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
--------------------------------------------.