கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
நட்சத்திரா குடியிருப்பு
(NACHATRA HOMES)
79-வது சுதந்திர தினவிழா
கோலாகலமாக
கொண்டாட்டம்
ஓசூர் மேயருக்கு நன்றி
தெரிவித்த குடியிருப்பு மக்கள்
ஓசூர். ஆகஸ்ட். 15. –
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
நட்சத்திரா குடியிருப்பு வளாகத்தில்
79-வது சுதந்திர தினவிழா
கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
தோனி CBSE பள்ளி அருகே
நட்சத்திரா குடியிருப்பு அமைந்துள்ளது.
இந்த குடியிருப்பில் உள்ள 120 வீடுகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் வசித்து வருகின்றனர்.
இந்த நட்சத்திரா குடியிருப்பில்
தமிழ்,
கன்னடம்,
தெலுங்கு,
மலையாளம்,
இந்தி,
என பன்மொழி பேசும் மக்கள் ஒற்றுமையுடன் வசித்து வருவதால், இந்திய நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக நட்சத்திரா குடியிருப்பு திகழ்கிறது.
உரிமையாளர்கள் நலச்சங்கம்
இந்த நட்சத்திரா குடியிருப்பில் உரிமையாளர்கள் நலச்சங்கம் இயங்கி வருகிறது.
இந்த சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும்
சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
79-வது சுதந்திர தினவிழா
அதேபோல நடப்பாண்டில் நட்சத்திரா குடியிருப்பில்
2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியன்று
79-வது சுந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு உரிமையாளர்கள் நலச்சங்க
தலைவர்
ராஜாராம்,
துணைத்தலைவர்
சரவணன்,
பொருளாளர்
இம்மானுவேல்
ஆகியோர் தலைமை வகித்தனர்.
79-வது சுதந்திர தினவிழா இறை வணக்கத்துடன் தொடங்கியது.
துணைத்தலைவர் சரவணன்
தேசியக்கொடி ஏற்றினார்.
விழாவில் சங்க நிர்வாகிகள் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்புரையாற்றினார்கள்.
நினைவு பரிசு
தொடர்ந்து சுதந்திரதினவிழாவில்
பங்கேற்ற சிறுவர், சிறுமிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும்
இனிப்பு வழங்கப்பட்டது.
இறுதியில் தேசிய கீதம் பாடி விழா நிறைவு பெற்றது.
இந்த 79-வது சுதந்திர தினவிழாவில் நட்சத்திரா குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
ஓசூர் மேயருக்கு நன்றி
சமீபத்தில் நட்சத்திரா குடியிருப்புக்கு
ஓசூர் மேயர்
S.A. சத்யா,
வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது குடியிருப்பில் வசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று நட்சத்திரா குடியிருப்பில் தெரு விளக்குகளை உடனடியாக அமைக்கப்படும் என்றும்,புதிய சாலை வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
சொன்னபடி நட்சத்திரா குடியிருப்பில் உடனடியாக தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்காக குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில்
79-வது சுதந்திரதினவிழாவில்
மேயர் சத்யாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
-----------------------------------------.