கிருஷ்ணகிரி வேளாண்மை
விவசாயிகள் நலச்சங்கம் சார்பில்
ஆலியாளம் வலதுபுறம் பிரதான
கால்வாய் அமைக்கும் திட்டத்தினை
மாற்றுப்பாதையில் செயல்படுத்த
கோரி விவசாயிகள்
சார் ஆட்சியரிடம் மனு
ஓசூர். டிச. 09. –
ஆலியாளம் வலதுபுறம் பிரதான கால்வாய் அமைக்கும் திட்டத்தினை
மாற்றுப்பாதையில் செயல்படுத்த வலியுறுத்தி
வேளாண்மை விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு
சார் ஆட்சியர் பிரியங்காவிடம் வழங்கப்பட்டது.
வேளாண்மை விவசாயிகள் நலச்சங்க தலைவர்
குமரேசன் தலைமையில்
சங்க குழு தலைவர் சிவய்யா,
நிர்வாகி மணி உள்ளிட்ட விவசாயிகள் வழங்கிய அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எல்லைக்குட்பட்ட
கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியில் அமைந்துள்ள
ஆலியாளம் அணைக்கட்டின் வலதுபுற பிரதான
கால்வாய் திட்டத்தினை நாங்கள் அரசாங்கம்
அறிவித்த நாள் முதல் ஆட்சேபனை தெரிவித்து
வருகிறோம்.
விவசாய நிலங்களை நாங்கள் ஒப்படைத்தால்
எங்கள் வாழ்வாதாரம் இழந்து போய் விடுவோம்.
எனவே நாங்கள் இந்த கால்வாய் திட்டத்துக்கு
இடம் தரமாட்டோம். நாங்கள் இந்த திட்டத்தினை மாற்று வழிப்பாதையில் செயல்படுத்தவே வேண்டுகிறோம்.
என்பது உட்பட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.