கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டையில் ரூ.99 லட்சம் மதிப்பில்
கட்டப்பட்டுள்ள புதியபேரூராட்சி
அலுவலக கட்டிடம்
காணொலி காட்சி வாயிலாக
முதலமைச்சர் திறப்பு
ஓசூர். செப்டம்பர். 14. –
தேன்கனிக்கோட்டை
தேர்வுநிலை பேரூராட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் ரூ.99 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தேர்வுநிலை
பேரூராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கிருஷ்ணகிரியில் செப்டம்பர் 14-ம் தேதி அன்று நடைபெற்ற அரசு விழாவில்
முடிவுற்ற திட்டப்பணிகளின் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று
தேன்கனிக்கோட்டையில் ரூ.99 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள
புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திறந்து வைக்கப்பட்ட புதிய பேரூராட்சி அலுவலகம் முன்பு
பேரூராட்சி தலைவர் சீனீவாசன்,
துணைத் தலைவர்,
கவுன்சிலர்கள்,
மணிகண்டன்,
முன்னாள் கவுன்சிலர்
எல்லப்பா,
தேவராஜ்,
பேரூராட்சி அலுவலர்கள்,
கட்டட ஒப்பந்ததாரர் சுதாகர் ஆகியோர்
கலந்து கொண்டு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்கள்.
பிறகு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
---------------------------------------.