கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் சிப்காட் வளாகத்தில்
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்
வர்த்தகத்துறையின் சார்பில்
குழந்தைகள் காப்பகம் –
காணொளி காட்சியில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திறப்பு
எம்எல்ஏ. ஒய். பிரகாஷ்,
மேயர் எஸ்.ஏ. சத்யா,
பங்கேற்பு
ஓசூர். அக். 13. –
மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்கள்
அக்டோபர் 13-ம் தேதி அன்று சென்னை
தலைமைச் செயலகத்திலிருந்து
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் சார்பாக,
போச்சம்பள்ளி சிப்காட் வளாகம்
மற்றும்
ஓசூர் சிப்காட் வளாகம்
ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடந்து
ஓசூர் சிப்காட் வளாகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில்
ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர்
திரு.ஒய். பிரகாஷ்,
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு. எஸ்.ஏ. சத்யா
ஆகியோர் குத்துவிளக்கேற்றி,
குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில்
ஓசூர் மாநகராட்சி துணை மேயர்
திரு. ஆனந்தைய்யா,
ஓசூர் சிப்காட் திட்ட அலுவலர்
திரு.ராஜ்குமார்.
மற்றும் கவுன்சிலர்கள்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
------------------------------------------.