உலக இதய தினம்
விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் காவேரி மருத்துவனை
சார்பில்
உலக இதய தினத்தை முன்னிட்டு
விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி
எம்எல்ஏ. ஒய். பிரகாஷ்
மேயர். எஸ்.ஏ. சத்யா
பங்கேற்பு
ஒசூர். செப். 29. –
உலக இதய தினம்
விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி
ஓசூர் காவேரி மருத்துவமனை சார்பில்
உலக இதய தினத்தை முன்னிட்டு
இதய நோய்கள் தடுப்பு பற்றிய
விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
ஓசூர் காவேரி மருத்துவமனை
சார்பாக உலக இதய தினம் முன்னிட்டு ஆண்டுதோறும் இதய நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி உலக இதய தினத்தை முன்னிட்டு
15 கி.மீ. மிதிவண்டி பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஓசூர் ஹில்ஸ் ஹோட்டல் வளாகத்தில் துவங்கிய இந்த பேரணியில் சிறப்பு விருந்தினர்களாக
எம்எல்ஏ. ஒய். பிரகாஷ்,
மேயர் எஸ்.ஏ. சத்யா,
மாநகர பொது சுகாதாரக் குழு தலைவர்
என்.எஸ். மாதேஸ்வரன்
ஆகியோர் கலந்துகொண்டு மிதிவண்டி ஓட்டி துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில்
மேயர் எஸ்.ஏ. சத்யா,
பேசும் போது...
அன்றாட வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி என்பது கட்டாயமாக்கப்பட வேண்டியது அவசியம் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், காவேரி மருத்துவமனை
வெல்நஸ் ஆன் வீல்ஸ் பஸ் உருவாக்கியதற்கு
நன்றி தெரிவித்தார்.
எம்எல்ஏ. ஒய். பிரகாஷ்
பேசும்போது …
அன்றாட வாழ்வில் உணவில் விரைவு உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான அளவான உணவு முறைக்கு மக்களை வலியுறுத்தினார்.
காவேரி மருத்துவமனை
இருதய நிபுணர்
டாக்டர். பிரசன்னா,
பேசும்போது...
இதயம், உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக உள்ளது.
தற்போது மாறி வரும் உணவு முறைகளால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியமாக உள்ள நிலையில்,
உலகளாவிய இதய நோய் மரணங்களுக்கு மாறி வரும் உணவு பழக்கமே முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
மேலும்,
மன அழுத்தம்,
உயர் ரத்த அழுத்தம்,
கொலஸ்ட்ரால்,
உடல் பருமன்,
நீரிழிவு,
புகை பிடித்தல்
மது
போன்ற பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.
தற்போதைய காலத்தில் குறைந்த வயதினருக்கும் கூட மாரடைப்பு வருவதை காண முடிகிறது என்று பேசினார்.
அவரை தொடர்ந்து,
காவேரி மருத்துவமனை
இருதய நிபுணர்
டாக்டர். அருள்ஞான சண்முகம்
பேசும் போது...
தற்போதைய கால சூழ்நிலையில் முறையான உடற் பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கம் இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை வலியுறுத்தும் வகையில் இப்பேரணி நடைபெறுகிறது என்று பேசினார்.
இந்த மிதிவண்டி பேரணி
ஓசூர் மூக்கண்டப்பள்ளி வழியாக சிப்காட், டைட்டன் ஜுவல்லரி டிவிசன், தர்கா
வழியாக பயணித்து ஹோட்டல் ஹில்ஸ் வந்தடைந்தது.
இந்த பேரணியில்...
இதய நோயின் அறிகுறிகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்,
இதயம் சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்கவும்,
இது தொடர்பான நோய்களைத் தடுக்கவும்,
கட்டுப்படுத்தவும்
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மக்களை ஊக்குவிக்கும்
வகையிலும் விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது.
ஓசூர் காவேரி மருத்துவமனை,
இயக்குநர்
டாக்டர். அரவிந்தன்
பேரணியில் பங்குகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
இந்த மிதிவண்டி பேரணியில்
காவேரி மருத்துவமனை
மேலாளர்
ஜோஷ் வர்கீஸ் ஜாய்,
உதவி மேலாளர்
பிந்துகுமாரி,
மற்றும் மருத்துவர்கள்,
தொழிற்சாலை பிரதிநிதிகள், மருத்துவமனை பணியாளர்கள், பல்வேறு மிதிவண்டி கிளப் மெம்பர்கள், சிறுவர்கள் முதல் பெரியோர்கள் என வயது வித்தியாசமின்றி பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.
----------------------------------------.