கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில்
ஏழை, எளிய நடுத்தர மக்களை
பாதிக்கும்
ஒன்றிய பாஜக அரசின்
பட்ஜெட்டை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஓசூர். பிப்ரவரி. 05. –
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
ஓசூரில் ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி,
ரயில் நிலையம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து
பிப்ரவரி 4-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு
ஓசூர் மாநகர செயலாளர்
நாகேஷ் பாபு
தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்
தேவராஜ்
முன்னிலை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏவும்,
மாநிலக்குழு உறுப்பினருமான
டில்லிபாபு
கண்டன உரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
ஒன்றிய பாஜக அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வழக்கம் போல,
முதலாளிகளுக்கு சாதகமான மற்றும் ஏழை மக்களுக்கு எதிரான பட்ஜெட் ஆக உள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு
நிதி ஒதுக்கீடு இல்லை.
மெட்ரோ 2-ம் கட்டத்திற்கும் கைவிரிப்பு,
தேர்தலுக்காகவே வருமான வரிச்சலுகை.
வேலை வாய்ப்புக்கான திட்டங்கள் இல்லை.
உரமானியம், எரிபொருள் மானியங்களில் வெட்டு,
என்பது உள்ளிட்ட பட்ஜெட்டில் விடுபட்டுள்ள பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு கண்டன முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகரக்குழு உறுப்பினர்
ஜி.சீனிவாசன்
நன்றியுரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
மகாலிங்கம்,
நஞ்சுண்டன்
மற்றும்
மாநகரக்குழு உறுப்பினர்கள்
பி.ஜி. மூர்த்தி,
ஜேம்ஸ் ஆஞ்சலாமேரி,
சி.பி.ஜெயராமன்,
ஸ்ரீதர்,
பி.ரவி
எம்.எம்.ராஜி,
எஸ்.மணி,
வெண்ணிலா,
ஒன்றியக்குழு உறுப்பினர்கள்
பி.ஜெயராமன்,
அந்தோனிசாமி,
சீனிவாசரெட்டி,
சந்திரசேகர்,
திம்மாரெட்டி,
சங்கர்,
தங்கம்மா,
தனலட்சுமி,
மூத்த தோழர்
சேது மாதவன்
DYFI முன்னாள் மாவட்ட செயலாளர்
எம்.ரவி
மற்றும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
வட்ட, மாவட்ட, நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.