ஒசூர் ஐடிஐ
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறை சார்பாக,
சேலம் மண்டல பயிற்சி
இணை இயக்குநர் அலுவலகம்
மற்றும்
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்
இணைந்து நடத்திய
சேலம் மண்டல அளவிலான
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் துவக்கி வைத்தார்.
ஒசூர். பிப். 6. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்,
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக,
சேலம் மண்டல பயிற்சி
இணை இயக்குநர் அலுவலகம்
மற்றும்
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்
இணைந்து நடத்திய சேலம் மண்டல அளவிலான
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
(06.02.2026) துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மற்றும் பயிற்சித் துறை
சார்பாக
தொழில் நிறுவனங்கள்
ஐடிஐ பயிற்சி பெற்ற மாணவர்களை
தேர்வு செய்து
தொழிற்பழகுநர் சட்டம் 1961-ன்படி
தொழிற்பழகுநர் பயிற்சி
வழங்கிடும் விதமாக
கடந்த 9 ஆண்டுகளாக
மண்டல அளவிலான
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்கள்
நடத்தப்பட்டு வருகிறது.
சேலம் மண்டலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டுவருகிறது.
இச்சேர்க்கை முகாம்கள் வாயிலாக தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் தொழிற்பயிற்சி
பெற விரும்பும் நபர்களை தேர்வு செய்து பயன்பெற்று வருகின்றன.
தேசிய தொழிற்பழகுநர்
ஊக்குவிப்பு திட்டத்தின் படி
30-க்கும் மேற்பட்ட பணியாளர்களை
கொண்ட நிறுவனங்கள்
தொழிற்பழகுநர் சட்டத்தின்படி
தொழிற்பழகுநர் பயிற்சி வழங்குவது கட்டாயமாகும்.
குறைந்த பட்சம் 4 பணியாளர்கள் முதல் 29 பணியாளர்களை கொண்ட
நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தின்
அடிப்படையில் பயிற்சி வழங்கலாம்.
நிறுவனங்கள் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில்
குறைந்தபட்சம் 2.5 சதவீதம் முதல்
15 சதவீதம் வரை தொழிற்பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை செய்து பயிற்சி வழங்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
மிகப்பெரிய தொழில்
மையமாக உருவெடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும்
107 நிறுவனங்கள் தொழிற்பழகுநர்
பயிற்சி வழங்கி வருகிறார்கள்.
இந்நிறுவனங்களின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1,65,087 ஆகும்.
இதன்படி குறைந்தபட்சம்
4,127 எண்ணிக்கையிலும்
அதிகபட்சம் 24,763 எண்ணிக்கையிலும்
சேர்க்கை செய்யப்பட வேண்டும்.
தற்சமயம் இந்நிறுவனங்களில்
மொத்தம் 9,845 நபர்களுக்கு பயிற்சி
வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் மூலமாக நிறுவனங்கள் வழங்கும் உதவித்தொகையில் ரூ.1,500/- சலுகை வழங்கப்படுகிறது.
நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் மாதாந்திர உதவித்தொகையில் ரூ.1,500/- குறைத்து பயிற்சியாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியவுடன் DBT முறையில் ரூ.1,500/-பயிற்சியாளர்களின் வங்கிக் கணக்கில்
நேரடியாக NSDC-ஆல் வழங்கப்படுகிறது.
இதனால் நிறுவனங்கள் உடனுக்குடன் பயனடைகிறது.
ஆகவே நிறுவனங்கள் இம்முகாமை நல்ல முறையில் பயன்படுத்தி தொழிற்பழகுநர்
பயிற்சி பெற விரும்புவோர்களை
தேர்வு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொழிற்பழகுநர் சட்டம் 1961-ன்படி
தொழிற்பயிற்சி (ஐடிஐ) முடித்து
நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு
தேசிய தொழிற்பழகுநர்
பயிற்சி சான்றிதழ்
(National Apprenticeship
Certificate - NAC)
வழங்கப்படுகிறது.
மேலும்,
8-வது, 10-வது, 12-வது,
Diploma, BA, BSc,
BCom, BE
கல்வித் தகுதி உடையவர்கள்
ஆப்சனல் தொழில் பிரிவுகளில் சேர்ந்து தொழிற்பழகுநர் பயிற்சி
பெற்று பயன்பெறலாம்.
உதவி தொகை
ஒரு வருட தொழிற்பழகுநர் பயிற்சிக்கு உதவித்தொகையாக மாதம்
ரூ.15,000/-முதல் ரூ.21,000/- வரை
நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.
தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு
மத்திய அரசின்
தேசிய தொழிற்பழகுநர்
பயிற்சி சான்றிதழ்
வழங்கப்படுகிறது.
தொழிற்பழகுநர் பயிற்சி சான்றிதழ்
பெற்றவர்கள் முழு திறன் பெற்றவராக அங்கீகரிக்கப்படுவதால்
தனியார் தொழில் நிறுவனங்களில்
இந்திய அளவிலும், அயல் நாடுகளிலும்
நல்ல ஊதியத்தில் நிரந்தர வேலை
பெறும் வாய்ப்பு உள்ளது.
மேலும், அரசு வேலைவாய்ப்பிற்கு
வயது வரம்பில் ஓராண்டு சலுகையும்,
மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில்
வேலை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
மேலும் தொழில் நிறுவனங்களில்
நல்ல தொழில் அனுபவம் பெற்று
சுய தொழில் முனைவோராகும்
வாய்ப்பும் உள்ளது.
எனவே, இம்முகாமிற்கு வருகை
புரிந்துள்ள மாணவர்கள் அனைவரும் தாங்கள் விரும்பும் தொழில் நிறுவனங்களில்
சேர்ந்து தொழிற்பழகுநர் பயிற்சி
பெற்று பயன்பெறலாம்.
அதேப்போல், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள,
அசோக் லேலண்ட்,
டைட்டன்,
இன்ஜினியரிங்
ஆட்டோமெஷின் லிமிடெட்,
டிவிஎஸ்,
வெண்ட் லிமிடெட்,
டாடா எலக்ட்ரானிக்ஸ்
உள்ளிட்ட நிறுவனங்கள்
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமை சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு
ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த
40 நபர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ்களும்,
22 நபர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.
மேலும், இன்று நடைபெற்ற முகாமில்
41 தனியார் நிறுவனங்களும்,
கிருஷ்ணகிரி,
சேலம்,
தருமபுரி,
நாமக்கல்
மாவட்டங்களைச் சேர்ந்த
450 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்
கலந்து கொண்டனர்.
இதில் 300 மாணவ, மாணவிகள் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேர்வாகியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில்,
சேலம் மண்டல பயிற்சி
இணை இயக்குநர்
திருமதி.ஜோ.அமலா ரெக்சலீன்,
மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர்
திரு.சி.பன்னீர் செல்வம்,
அரசு தொழிற் பயிற்சி நிலைய
மேலாண்மை குழு தலைவர்
திரு.ரமேஷ்,
மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும்
சுகாதார இயக்கக துணை இயக்குநர்
திருமதி.உமா பாரதி,
மாவட்ட தொழில் மைய
பொதுமேலாளர்
திரு.வெங்கடேசன்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்
திரு.கௌரிசங்கர்,
தொழிலாளர் நலத்துறை
(சமூக பாதுகாப்பு திட்டம்)
திரு.மாதேஷ்வரன்,
தருமபுரி மாவட்ட திறன்
பயிற்சி அலுவலர்
திரு.அண்ணாதுரை,
போச்சம்பள்ளி அரசு
தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்
திருமதி.சாந்தி
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்,
தொழிற்சங்க பிரதிநிதிகள்,
மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
-----------------------------------.