நேற்றைய வரலாறு - இன்றைய பாடம்
---------------------------------------------.
வானியலில் சாதனைகள் படைத்த
கணிதவியலாளர்,
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
பிப்ரவரி 19 – 1473 -
சூரிய மைய கோட்பாட்டை வலியுறுத்திய நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
552- வது பிறந்ததினம் –
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். பிப். 19. –
”நான் புதியதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை கண்களை மூடிக்கொண்டு இருக்க சொன்ன மதவாதிகளுக்கு எதிராக கண்களை திறந்து பார்க்க சொன்னேன்” -
நிக்கோலாஸ் கோப்பர்நிக்கஸ்
கோப்பர்நிக்கஸ் பிறந்த இடம், போலந்திலுள்ள டாருன் நகரம்.
அவருக்கு பெற்றோர் வைத்த பெயர்,
மிகாலை காப்பெர்நிக்.
அவர் புகழ்பெற்ற புத்தகங்களை எழுத ஆரம்பித்த சமயத்தில்,
நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்
என்ற லத்தீன் பெயரை தனக்கு வைத்துக்கொண்டார்.
அவருடைய அப்பா டாருன் நகரில் வியாபாரம் செய்தார். அவருக்கு நான்கு பிள்ளைகள்; நிக்கோலஸ்தான் கடைசி பிள்ளை. 11-வது வயதில் நிக்கோலஸ், அப்பாவை இழந்தார்.
நிக்கோலஸின் தாய்மாமன் லூகாஸ் வாக்ஸன்ரோடு என்பவர் நிக்கோலஸையும் மற்ற மூன்று பிள்ளைகளையும் வளர்த்தார். சிறந்த கல்விபெற நிக்கோலஸுக்கு உதவிய அவர், மதகுரு ஆகும்படியும் அவரை ஊக்குவித்தார்.
நிக்கோலஸ் முதலில் தனது சொந்த ஊரில் படிக்கத் தொடங்கினார்; பிறகு அருகேயிருந்த கெல்ம்நாவில் படிப்பைத் தொடர்ந்தார்.
அங்கு அவர் லத்தீன் மொழியைக் கற்றுக்கொண்டு மிகப் பழமையான எழுத்தாளர்களின் புத்தகங்களை ஆராய்ச்சி செய்தார்.
18-வது வயதில் போலந்தின் அப்போதைய தலைநகருக்கு, அதாவது கிராகெளவிற்கு சென்றார். அங்குள்ள யுனிவர்சிட்டியில் சேர்ந்து வானியலில் தனக்கிருந்த அறிவுப் பசியைத் தீர்க்கும் பொருட்டு அதை பயின்றார்.
கிராகெளவில் படிப்பை முடித்த பிறகு பால்டிக் கடல் பகுதியிலிருந்த ஃபிரம்பர்க் நகரத்திற்கு வரும்படியாக நிக்கோலஸை அவருடைய மாமா அழைத்தார்; அந்த சமயத்தில் அவருடைய மாமா, வார்ம்யா என்ற பகுதியின் தலைமைக் குருவாக ஆகிவிட்டிருந்தார்.
நிக்கோலஸும் சர்ச்சில் ஒரு விசேஷ பதவியை ஏற்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.
என்றாலும் 23 வயதான நிக்கோலஸ் தன் அறிவுப் பசியைத் தீர்க்க விரும்பினார். எனவே அவருடைய மாமாவிடம் மன்றாடி, கிறிஸ்தவ சமயச்சட்டம், மருத்துவம், கணிதம் ஆகியவற்றைத் தொடர்ந்து கற்க அனுமதி பெற்றார். போலோக்னா, படூவா ஆகிய இத்தாலிய பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர்ந்தார்.
அங்கு அவர் டொமேனிக்கோ மாரீயா நொவாரா என்ற வானியல் நிபுணருடனும் பியெட்ரோ பொம்பொனாட்ஸி என்ற தத்துவ வல்லுநருடனும் நெருங்கிப் பழகினார்.
பொம்பொனாட்ஸியின் போதனைகள், “இடைக்கால கருத்துக்களிலிருந்து [விடுபட] அந்த இளம் வானவியலாளருக்கு உதவின” என்பதாக ஸ்டாநிஸ்வாஃப் பஸாஸ்ட்கிவிக் என்ற சரித்திராசிரியர் கூறினார்.
கோப்பர்நிக்கஸ் ஓய்வு நேரங்களில் பழங்கால வானியல் நிபுணர்களுடைய புத்தகங்களைப் படித்து ஆராய்ந்தார்.
அந்த மும்முரமான ஆராய்ச்சியின்போது, லத்தீன் மொழி புத்தகங்களில் போதுமான தகவல்கள் இல்லாததை உணர்ந்தார். எனவே மூலவாக்கியங்களைப் படிப்பதற்காக கிரேக்க மொழியைக் கற்றார்.
கணித வல்லூநர் மற்றும்
மருத்துவர்
பட்டப் படிப்பு முடிவடையும் சமயத்தில், அவர் கிறிஸ்தவ சமயச்சட்டத்தில் டாக்டர் பட்டம் பெற்றுவிட்டார், அதோடு கணித வல்லுநராகவும், மருத்துவராகவும்கூட ஆகிவிட்டார்.
மொழிபெயர்ப்பில் முன்னோடி
மேலும், கிரேக்க மொழியில் புலமை பெற்றிருந்ததால் கிரேக்கிலிருந்து நேரடியாக போலிஷ் மொழிக்கு ஒரு கட்டுரையை மொழிபெயர்த்தார். அவ்வாறு மொழிபெயர்த்த முதல் நபர் இவரே.
கோப்பர்நிக்கஸின் சுழற்சிக் கொள்கை - ஏழு பகுதிகளைக் கொண்டது.
1. வானக் கோளத்திற்குப் பொதுவானதோர் மையம் இல்லை (குறிப்பாகப் பூமி தான் அனைத்திற்கும் மையம் என்பது தவறு.).
2. புவியின் மையம் பேரண்டத்தின் மையம் அல்ல. அது புவி ஈர்ப்பு மையமும் சந்திரனின் சுழற்சிப் பாதையின் மையமுமே ஆகும்.
3. அனைத்துக் கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன.
4. புவியிலிருந்து சூரியன் உள்ள தொலைவு புவியிலிருந்து வெகுதொலைவில் உள்ள விண்மீன்கள் இருக்கும் வான்கூரையின் (firmament) தொலைவுடன் ஒப்பிடும்போது கட்புலனாகாத அளவு சிறியதாக இருக்கிறது.
5. புவி, தனது அச்சில் தினசரி சுழல்கிறது. புவியின் சுழற்சி காரணமாகவே தொலைவில் உள்ள விண்மீன்கள் நகருவதாகத் தோன்றுகின்றன, உண்மையில் விண்மீன்கள் அசைவுறாத வானக்கூரையில் நிலையாக அமைந்துள்ளன.
6. சூரியனின் நகர்வு உண்மையில் சூரியனின் நகர்வல்ல. புவி நகர்வதால் தோன்றும் உணர்வு.
7. கோள்களின் பின்னோக்கிய நகர்வுத் தோற்றமும் முன்னோக்கிய நகர்வுத் தோற்றமும் அவற்றினுடையதல்ல. அவை புவியின் நகர்வால் உருவாக்கப்படுபவையே
அனைத்துக் கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன.
புவியிலிருந்து சூரியன் உள்ள தொலைவு புவியிலிருந்து வெகு தொலைவிலுள்ள விண்மீன்கள் இருக்கும் வான்கூரையின் (firmament) தொலைவுடன் ஒப்பிடும் போது கட்புலனாகாத அளவு சிறியதாக இருக்கிறது.
புவி, தனது அச்சில் தினசரி சுழல்கிறது. புவியின் சுழற்சி காரணமாகவே தொலைவிலுள்ள விண்மீன்கள் நகருவதாகத் தோன்றுகின்றன, உண்மையில் விண்மீன்கள் அசைவுறாத வானக்கூரையில் நிலையாக அமைந்துள்ளன.
கோள்களின் பின்னோக்கிய நகர்வுத் தோற்றமும் முன்னோக்கிய நகர்வுத் தோற்றமும் அவற்றினுடையதல்ல. அவை புவியின் நகர்வால் உருவாக்கப்படுபவையே.
கோப்பர்நிக்கஸ் தன்னுடைய புத்தகத்தை ஆறு பகுதிகளாக பிரித்திருக்கிறார். அவருடைய புத்தகத்தின் சில முக்கியமான கருத்துக்கள் கீழே:
● எத்தனையோ “பயணிகளின்” நகர்வுகளை ‘சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சூரியன்’ கட்டுப்படுத்துகிறது. அதில் நம்முடைய கிரகமும் ஒன்று.
● கிரகங்கள் ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அதில் பூமியும் ஒன்று. பூமி ஒரு நாளைக்கு ஒரு முறை அதன் அச்சிலேயே சுழல்கிறது. ஒரு வருடத்திற்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வருகிறது.
● சூரியனை மையமாக கொண்டு சுற்றிவரும் கிரகங்களின் வரிசையில், முதலாவது புதன், இரண்டாவது வெள்ளி, அதற்கு அடுத்து வருவது பூமியும் சந்திரனும், பிறகு செவ்வாய், வியாழன், கடைசியாக சனி.
-------------------------------------------------.