ஓசூர் பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில்
விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட
முதல் நாளே
மூன்றாம் பருவத்திற்குரிய
விலையில்லா புத்தகங்களை
மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட
மாணவர்கள்
உற்சாகத்துடன் கல்வி கற்பிக்க
தொடங்கிய ஆசிரியர்கள்
ஓசூர். ஜனவரி. 02. –
விலையில்லா புத்தகங்கள்
ஓசூர் பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில்
விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த முதல்
நாளிலேயே தமிழ்நாடு அரசின்
மூன்றாம் பருவத்திற்குரிய விலையில்லா புத்தகங்கள்
வழங்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பேடரப்பள்ளி
அரசு நடுநிலைப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம்
பேடரப்பள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி
இயங்கி வருகிறது. இப்பள்ளியில்
900 மாணவ, மாணவிகள் ஒன்று முதல்
எட்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில
வழியில் கல்வி பயின்று வருகின்றனர்.
3-ம் வகுப்பு ஏ - பிரிவு மாணவர்கள்
பள்ளிகள் திறக்கப்பட்ட உடனேயே மாணவர்களுக்கு விலையில்லா
புத்தகங்கள் வழங்க - அரசு அறிவிப்பு
இந்த பள்ளியில் இரண்டாம் பருவத்தேர்வுகள்
முடிந்தவுடன், கடந்த டிசம்பர் 24-ம் தேதி முதல்
2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை
9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது.
விடுமுறைக்கு பின் ஜனவரி 2-ம் தேதி அன்று
பள்ளிகள் திறக்கப்பட்டது.
பள்ளிகள் திறக்கப்பட்ட உடனேயே மாணவர்களுக்கு விலையில்லா
புத்தகங்கள் வழங்கப்படும் என்று தமிழக
பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
5-ம் வகுப்பு பி - பிரிவு மாணவர்கள்
பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே
மாணவர்களுக்கு விலையில்லா
புத்தகங்கள் வழங்கல்
அதன்படி பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி
திறக்கப்பட்ட முதல் நாளே, பள்ளிக்கு
வருகை தந்த 750 மாணவ, மாணவிகளுக்கு,
தமிழக அரசின் விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுகள், தலைமையாசிரியர் பொன்நாகேஷா மற்றும் வகுப்பு ஆசிரியர்களால்
வழங்கப்பட்டது.
இதன் காரணமாக
விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட
முதல் நாளே புதிய பாட புத்தகங்களை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு, ஆசிரியர்கள்
உற்சாகத்துடன்
பாடங்களை கற்பிக்க தொடங்கினர்.
இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும்,
பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.