கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி வட்டம்,
மருதாண்டப்பள்ளி ஊராட்சி,
மீட்புப்பணிகள் துறை சார்பாக,
அட்ரகானப்பள்ளி கிராமத்தில்,
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்
மீட்புப்பணிகள் நிலையம் திறப்பு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
பங்கேற்பு.
ஓசூர். அக். 16. –
புதிய தீயணைப்பு -
மீட்புப்பணிகள் நிலையம்
சூளகிரி வட்டம் மருதாண்டப்பள்ளி ஊராட்சியில் மீட்புப்பணிகள் துறை சார்பாக அட்ரகானப்பள்ளி கிராமத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தை அக்டோபர் . 16-ம் தேதியன்று
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார். இ.ஆ.ப.,
அவர்கள் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்
தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி தாலுக்கா தலைமையிடமாக உள்ளதாலும்,
தொழிற்சாலைகள் மற்றும் கிரானைட் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதாலும்,
சூளகிரியைச் சுற்றி மலைகள் என்பதாலும்,
அதிக அளவில் மீட்பு அழைப்புகள் பெறப்பட்ட வண்ணம் இருந்த நிலையிலும்,
சூளகிரியை ஒட்டி தேசிய நெடுஞ்சாலை செல்வதாலும்,
அதிக அளவில் சரக்கு லாரிகள் செல்வதாலும்,
சாலை விபத்துக்கள் அதிக அளவில் பெறப்பட்டதாலும்,
15 கீ.மீ தூரத்தில் எந்த நிலையமும் இல்லை என்பதாலும்,
அதிக அளவில் மக்கள் தொகை உள்ளதாலும்,
பொதுமக்கள் மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கையின்பேரிலும்,
சூளகிரி என்ற இடத்தில்
புதிய தீயணைப்பு - மீட்புப்பணி நிலையம்
அமைப்பது மிகவும் முக்கியவத்துவம்
வாய்ந்ததாக உள்ளது.
மேலும்,
கடந்த 5 ஆண்டுகளில் சூளகிரி பகுதியில்
2021 முதல் 2025 வரை 27 தீ விபத்துகள் நடைபெற்றுள்ளது.
இதில் சேத மதிப்புகள் ரூ.1,10,000 மும், காப்பாற்றப்பட்ட மதிப்புகள் ரூ.17,81,500 ஆகும்.
மேலும்,
2021-2025 வரை 29 மீட்பு அழைப்புகள் பெறப்பட்டு,
அவற்றில்
3 மனித உயிர்கள்.
மற்றும்
7 விலங்கின உயிர்கள்.
காப்பாற்றப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2025-2026 ஆம் ஆண்டு தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பாணை எண்: 80 ன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரியில்
ஒரு புதிய தீயணைப்பு மீட்புப்பணி நிலையம்
அமைக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டதின்பேரில்,
நாளிட்ட அரசாணை எண்: 448 உள் (காவல்-17) துறையின்படி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி என்ற இடத்தில் ரூ.237.65 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கி புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையம் அமைத்திட அரசாணைகள் 01.09.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, தற்போது கதவு எண்: 3/425/16, சேம்பியன் சிட்டி லே-அவுட், அட்ரகானப்பள்ளி கிராமம், சூளகிரி அஞ்சல் மற்றும் வட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரியில் புதிய தீயணைப்பு மீட்புப்பணி நிலையம் வாடகைக் கட்டிடத்தில் செயல்பட உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்,
தமிழ்நாடு தீயணைப்பு மீட்புபணித் துறை
துணை இயக்குநர் (சேலம் மண்டலம்)
திரு.சி.கல்யாண் குமார்,
மாவட்ட தீயணைப்பு அலுவலர்
திரு.வேலு,
நிலைய அலுவலர்கள்
திரு.சக்திவேல்,
திரு.நாகவிஜயன்,
திரு.ராஜா (ஓசூர்),
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.கலா,
திரு.கார்த்தி
மற்றும்
மு.உள்ளாட்சி பிரதிநிதிகள்,
துறை சார்ந்த அலுவலர்கள்,
சூளகிரி பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
---------------------------------------------.