ஓசூர் திமுக மாநகர விளையாட்டு
மேம்பாட்டு அணி சார்பில்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
பிறந்தநாள் விழா முன்னிட்டு
சந்திரசூடேஸ்வரர் கோயிலில்
சமபந்தி போஜனம்
அறுசுவை உணவு
பரிமாறிய மேயர்
ஓசூர். டிச. 02. –
by Jothi Ravisugumar
ஸ்ரீமரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர்
கோயிலில் சமபந்தி போஜனம்
ஓசூரில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான
ஸ்ரீமரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர்
கோயிலில் ஓசூர் திமுக மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா முன்னிட்டு சமபந்தி போஜன நிகழ்ச்சி நடைபெற்றது.
மேயர் எஸ்.ஏ.சத்யா
இந்த நிகழ்வில் ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா
பங்கேற்று, பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கி, சமபந்தி போஜன நிகழ்வை தொடங்கி வைத்தார்.
இந்த சமபந்தி போஜனம் நிகழ்ச்சியில்
500-க்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்று உணவருந்தினர்.
துணை மேயர் ஆனந்தய்யா
இதில் துணை மேயர் ஆனந்தய்யா, தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி,
பகுதி செயலாளர் ராமு, அணிகளின் அமைப்பாளர்கள் சக்திவேல், ராஜா, மகேஷ்பாபு, லோகநாதன், ஹரிபிரசாத், ரத்னசிங், நசீர், சபீர், ராபின், முனிராஜ், அருண்.
விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளர் ராமமூர்த்தி, துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், மாரிமகேஷ், சங்கர், ரமேஷ்பாபு, வெங்கடேஷ், கவுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.