கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம்,
போகனப்பள்ளி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி,
அரசு கலைகல்லூரி சமூகநீதி மாணவர் விடுதிகள்
பெத்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் திடீர் ஆய்வு
ஓசூர். நவ. 6. –
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் இயங்கி வரும்
போகனப்பள்ளி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி,
அரசு கலைகல்லூரி சமூகநீதி மாணவர் விடுதிகள்
பெத்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
ஆகியவற்றில்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் நவம்பர் 6-ம் தேதியன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், போகனப்பள்ளியில் செயல்பட்டு வரும்
அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதி, அரசு கலைக்கல்லூரி சமூகநீதி மாணவர் விடுதிகளில் மாணவர்களுக்கு
சமைக்கப்பட்ட உணவு,
உணவுப்பொருட்களின் இருப்பு,
மாணவர்கள் தங்கும் அறை,
கழிப்பறை,
குடிநீர் வசதி,
மின்சார வசதி
ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும்
விடுதியில் வழங்கப்படும்
உணவு தரமாகவும்,
சரியான முறையில் வழங்கப்படுவது குறித்தும்,
பாடதிட்டங்கள், தேர்வுகளுக்கு தயாராகி வருவது குறித்தும்
விடுதி மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும்,
மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கவும்,
மாணவர்கள் தங்கும் அறைகள்,
கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவும்,
விடுதி காப்பாளர்களுக்கு
அறிவுரை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து வருகிறது.
அதேப்போல அரசு கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு
தமிழ்புதல்வன்,
புதுமைப்பெண்,
திறன் பயிற்சி,
நான்முதல்வன்
உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுதி வருகிறது.
எனவே மாணவ, மாணவிகள் அரசு வழங்கும்
பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி
சிறப்பான முறையில் கல்வி கற்று போட்டி தேர்வுகள் எழுதி வேலைவாய்ப்பை பெறவேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, பெத்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின்
ஆங்கில கற்றல் திறன்,
மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு,
மற்றும் கழிப்பறைகள் வசதி
ஆகியவற்றை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வு பணியின் போது
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்
மற்றும் ஆசிரிய பெருமக்கள், விடுதி காப்பாளர்கள் உடன் இருந்தனர்.
--------------------------------------.