கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
26 -வது வார்டு
பார்வதி நகர்,
காலே குண்டா குடியிருப்புகளில்
மேயர். எஸ்.ஏ. சத்யா
நேரில் ஆய்வு
ஓசூர். அக். 18. –
மேயர் எஸ்.ஏ. சத்யா
நேரில் ஆய்வு
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
26 - வது வார்டில் உள்ள
பார்வதி நகர், காலே குண்டா
ஆகிய குடியிருப்பு பகுதிகளில்
மேயர் எஸ்.ஏ. சத்யா நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டில் உள்ள
பார்வதி நகர்,
காலே குண்டா
ஆகிய குடியிருப்பு பகுதிகளில்
கழிவுநீர் கால்வாய்,
தெருவிளக்கு,
சாலை வசதி
ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதை தொடர்ந்து, 26 வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில்
மேயர் எஸ்.ஏ.சத்யா
அவர்கள்
நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது குடியிருப்பு பகுதிகளில்
கழிவுநீர் கால்வாய்,
தெருவிளக்கு,
சாலை வசதி
ஆகிய பிரச்சனைகள் குறித்து ஒவ்வொரு தெருக்களிலும் பார்வையிட்டு
அங்கு வசிக்கும் மக்களிடம்
குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் திரு. Md. ஷபீர் ஆலம்,
மாநகர நல அலுவலர் டாக்டர். அஜீதா,
மண்டல குழு தலைவர் ரவி,
மாமன்ற உறுப்பினர் ஷில்பா சிவகுமார்,
பகுதி கழகச் செயலாளர் ராமு,
இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் சக்திவேல், மாவட்ட சிறுபான்மை பிரிவு இக்ரம்,
வட்டக் கழக செயலாளர்கள் நாகராஜ், முருகன்,
பகுதி பிரதிநிதி சு.முருகன், சங்கர் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
----------------------------------------------.