ஓசூரில் விவசாயிகள்
நலன் காக்கும்
கடலைக்காய் திருவிழா
ஓசூர் வரசித்தி ஆஞ்சநேயர்
சுவாமி கோயிலில்
67-வது ஆண்டு
கடலைக்காய் திருவிழா
ஓசூர். ஜனவரி. 01. –
ஓசூர் வரசித்தி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில்
67-வது ஆண்டு கடலைக்காய் திருவிழா நடைபெற்றது.
வரசித்தி ஆஞ்சநேயர் கோயில்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி,
தேர்ப்பேட்டை அருகே உள்ள ராஜகணபதி நகரில்
வரசித்தி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் விவசாயம் பெருகவும்,
விவசாயிகள் நலன் பாதுகாக்கவும், ஆண்டுதோறும்
ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 1-ம் தேதி கடலைக்காய் திருவிழா நடைபெற்று வருகிறது.
2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி 67-வது ஆண்டு கடலைக்காய் திருவிழா நடைபெற்றது.
கணபதி ஹோமம்
கடலைக்காய் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம்
அதைத்தொடர்ந்து அபிஷேகம், புஷ்ப அலங்காரம்,
மகாமங்களாரத்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
கடலைக்காய்க்கு சிறப்பு பூஜை
வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்த கடலைக்காய்க்கு சிறப்பு பூஜையும், அதைத் தொடர்ந்து வரசித்தி ஆஞ்சநேயர் சுவாமிக்கு கடலைக்காய் படையல் வைத்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில்
வரசித்தி ஆஞ்சநேயர்
இந்த கடலைக்காய் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கடலைக்காய்களை
வரசித்தி ஆஞ்சநேயர் சுவாமி
மீது மலர் போல தூவி பூஜையில் ஈடுபட்டனர்.
சிறப்பு அலங்காரத்தில் வரசித்தி ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஓசூர் மாநகர பொது சுகாதார குழு
தலைவர் என்.எஸ். மாதேஸ்வரன்
இந்த கடலைக்காய் திருவிழாவில் கோயில் அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி,
திருமதி பத்மாவதி கிருஷ்ணமூர்த்தி,
ஓசூர் மாநகர பொது சுகாதார குழு தலைவர்
மாதேஸ்வரன், உட்பட நூற்றுக்கணக்கான
பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விவசாயிகள் நலன் பாதுகாக்கும்
கடலைக்காய் திருவிழா
இதுகுறித்து மாநகர பொது சுகாதார குழு தலைவர்
மாதேஸ்வரன் கூறியதாவது,
ஓசூர் மாநகர் ராஜகணபதி நகரில்
வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில்
67 ஆண்டுகளாக கடலைக்காய் திருவிழா
மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவின் நோக்கம், விவசாயம் பெருகவும்
விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படவும் ஆண்டுதோறும் விழா எடுக்கப்படுகிறது.
கடலைக்காய் பிரசாதம்
ஓசூர் பகுதியில் கடலைக்காய் அதிகளவில்
விவசாயம் செய்யப்படுவதால், அந்த கடலைக்காயை இறைவனுக்கு படைத்து விவசாயிகளின் கோரிக்கைகளை, வேண்டுதல்களை முன்வைத்து வழிபடுவது வழக்கம். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக ஐதீகம். நெய்வேத்தியமாக, பிரசாதமாக கொடுக்கப்படும் இந்த கடலைக்காயை ஒவ்வெருவரும்
வீட்டுக்கு எடுத்துச் சென்று பிரசாதமாக சாப்பிடுவதன் மூலமாக கோரிக்கைகள் நிறைவேறுவதாக ஐதீகம். இவ்வாறு அவர் கூறினார்.