மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும்
சென்னை அகில இந்திய குடிமைப்பணி
தேர்வு பயிற்சி மையம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த
பட்டதாரி இளைஞர்கள்
இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான
போட்டி தேர்விற்கு பயிற்சி பெற
25. 11. 2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
ஓசூர். நவ. 19. –
மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த
பட்டதாரி இளைஞர்களுக்கு
IAS - போட்டி தேர்விற்கு பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த
பட்டதாரி இளைஞர்கள்
இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான
போட்டி தேர்விற்கு பயிற்சி பெற
நவம்பர் 25-ம் தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது…
மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம். நிதி.
பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தம்)
அவர்கள் 12-11-2017 அன்று சட்ட பேரவையில்
அறிவித்ததன்படி
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
மற்றும்
சென்னை அகில இந்திய குடிமைப்பணி
தேர்வு பயிற்சி மையம்
இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும்
உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை
தேர்ந்தெடுத்து அவர்களுக்கு
குடிமைப்பணிகளுக்கான போட்டித்தேர்வில்
கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யோக
பயிற்சி அளித்திடும் திட்டத்தினை
செயல்படுத்திட தமிழ்நாடு அரசால்
ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு
சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவ நலவாரிய
உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள்
இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
விண்ணப்ப படிவம்
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர்
விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு
நெறிமுறைகளை கிருஷ்ணகிரி மாவட்ட
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
உதவி இயக்குநர் அலுவலகத்தில்
அலுவலக வேலை நாட்களில்
நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் அரசு வழிகாட்டு
நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து
உரிய ஆவணங்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு
பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது
நேரடியாகவோ 25.11.2025 மாலை 5.00 மணிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு
உதவி இயக்குநர் அலுவலகம்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
கிருஷ்ணகிரி அரசு மீன்பண்ணை எதிரில்
கே.ஆர்.பி.அணை, காவேரிப்பட்டினம்,
கிருஷ்ணகிரி - 635101.
என்ற முகவரியில் நேரிலோ அல்லது
கைப்பேசி எண் 9384824261 என்ற எண்ணில்
தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------.