கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
பிளாஸ்டிக் பயன்பாட்டை
தடுக்க போர்க்கால நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
மாநகராட்சி கூட்டத்தில்
பொது சுகாதார குழு தலைவர் அறிவுறுத்தல்
ஓசூர், மார்ச். 27. -
பொது சுகாதாரக்குழு தலைவர்
மாதேஸ்வரன்
ஓசூர் மாநகராட்சி
கூட்டரங்கில் நடந்த
பொது சுகாதாரக் குழு கூட்டத்தில்
ஓசூரில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து
வருவதை தடுக்க, மொத்தமாக விற்பனை செய்யும் குடோன்களை கண்டறிந்து பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புற்றுநோய் போன்ற பல்வேறு
நோய்கள் ஏற்படுவதற்கு
பிளாஸ்டிக் ஒரு முக்கிய
காரணமாக உள்ளது.
எனவே அதை தடுத்து,
அடுத்த தலைமுறையை காக்க
வேண்டியது நமது கடமையாகும்
என்று
பொது சுகாதாரக்குழு தலைவர்
மாதேஸ்வரன் கூறினார்.
பொது சுகாதாரக் குழு கூட்டம்
ஓசூர் மாநகராட்சி கூட்டரங்கில்
மார்ச் 27-ம் தேதி
பொது சுகாதாரக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு
மாநகர பொது சுகாதாரக்
குழு தலைவர்
மாதேஸ்வரன்
தலைமை வகித்தார்.
கமிஷனர்
மாரிசெல்வி,
மாநகர நல அலுவலர்
அஜிதா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மொத்தம், 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன் பேசியதாவது,
அம்மை நோய் விழிப்புணர்வு
ஓசூரில் அம்மை நோய் பரவி வருகிறது. அதற்கு தேவையான மருந்து மாத்திரைகள் சரியான அளவில் இருப்பு உள்ளதா என கண்காணிக்க வேண்டும்.
அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அரசுமருத்துவமனை
ஓசூர் அரசு மருத்துவமனையில்
உள்நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கான கூடத்தை சரியாக பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே உடனடியாக ஆய்வு செய்து உள்நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும். உறவினர்கள் தங்கும் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
ரேபிஸ் தடுப்பூசி
ஓசூர் மாநகராட்சியில்
இதுவரை, 3216 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு
ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில், 10 பெண் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் கழிவறைகள் மோசமான நிலையில் உள்ளது.
அவற்றை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருட்காட்சிகள்,
சர்க்கஸ்,
போன்றவற்றுக்கு மாநகராட்சியிடம் தான் அனுமதி பெறப்படுகிறது.
ஆனால் அங்கு சரியான
கழிவறைகள் வசதி செய்வதில்லை. எனவே அவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் போன்ற
இடங்களில் 100 கிலோவிற்கு
மேல் சேரும் குப்பையை
அவர்களே தரம் பிரித்து
மறுசுழற்சி செய்து கொள்ள
வேண்டும் என்பது தான் அரசு விதிமுறையாகும்.
100 கிலோவிற்கு மேல் குப்பை
சேர்ந்தால் அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றக் கூடாது.
அவற்றை அகற்ற வேண்டும் என்றால் ஒரு டன்னுக்கு ரூபாய் 4 ஆயிரம் சம்பந்தப்பட்ட நிர்வாகம் செலுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் ஒழிப்பு
போர்க்கால நடவடிக்கை
ஓசூரில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே மொத்தமாக விற்பனை செய்யும் குடோன்களை கண்டறிந்து பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு பிளாஸ்டிக் ஒரு காரணமாக உள்ளது. எனவே அதை தடுத்து அடுத்த தலைமுறையை காக்க வேண்டியது நமது கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆறுமுகம், மோசின்தாஜ்,
கலாவதி சந்திரன்,
லட்சுமி மற்றும்
அரசு மருத்துவமனை,
ஆரம்ப சுகாதார நிலைய
டாக்டர்கள், செவிலியர்கள்,
மாநகராட்சி ஊழியர்கள்
மற்றும் பலர் பங்கேற்றனர்.
-----------------------------------------.