கெலமங்கலம் ஒன்றியம்
பெரிய உள்ளுகுறுக்கியில்
பொங்கல் பண்டிகைiயொட்டி
முத்தப்பன் கோயில் பூஜையுடன்
எருது விடும் விழா
200 காளைகள் பங்கேற்பு
ஓசூர். ஜனவரி. 16. –
கெலமங்கலம் ஒன்றியம் பெரிய உள்ளுகுறுக்கியில்
அமைந்துள்ள முத்தப்பன் கோயிலில் பொங்கல் பண்டிகை மற்றும் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் எருது விடும் விழா நடைபெற்றது.
பெரிய உள்ளுகுறுக்கி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த
எருதுவிடும் விழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் 200 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பெரிய உள்ளுகுறுக்கி கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற
எருது விடும் போட்டியில் பங்கேற்ற
எருதுகளின் கொம்புகளில் அழகிய வண்ண வேலைபாடுகள் கொண்ட அலங்கார தட்டிகள் மற்றும் வண்ணமயமான பலூன்களுடன்
பரிசு பொருட்கள் கட்டப்பட்டிருந்தன.
ஒவ்வொரு காளையும் வாடிவாசல் வழியாக திறந்துவிடப்பட்டது
இந்த போட்டியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு காளைகளை மடக்கி பிடித்து அலங்கார தட்டிகளை கைப்பற்றினர்.
ஒரு சில காளைகள் எந்த வீரருக்கும் பிடிபடாமல் மைதானத்தில் சீறிப் பாய்ந்து ஓடியது.
காளைகளை மடக்கி பிடித்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த எருதுவிடும் விழாவை காண கெலமங்கலம், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, தளி, உத்தனப்பள்ளி ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
எருது விடும் விழா ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ஈஸ்வரி முத்தன் மற்றும் ஊர் பெரியவர்கள் செய்திருந்தனர்.