சமத்துவ பொங்கல் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில்
இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ
மதங்களைச் சேர்ந்த குருமார்கள்
முன்னிலையில்
சமத்துவ பொங்கல் விழா
உற்சாகத்துடன் கொண்டாட்டம்
மேயர் எஸ்.ஏ. சத்யா
பங்கேற்பு
ஒசூர். ஜன.15. -
மாநகராட்சி அலுவலகத்தில்
சமத்துவ பொங்கல் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி அலுவலகம் சார்பில்
சமத்துவ பொங்கல் விழா
பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு
மாநகராட்சி அலுவலக வளாகத்தில்
அழகிய வண்ணமயமான கோலமிட்டு
புது அடுப்பு வைத்து பூஜை செய்து
பொங்கல் திருநாளை வரவேற்று
சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
“பொங்கலோ பொங்கல்”
பின்பு
மேயர் எஸ்.ஏ. சத்யா.
அவர்கள் தலைமையில்
வண்ணங்கள் பூசப்பட்ட புதுப் பானையில்
பொங்கலிட்டு...
பொங்கல் பொங்கி வந்த சமயத்தில்
“பொங்கலோ பொங்கல்”
என்று உற்சாக முழக்கத்துடன்
பொங்கலை வரவேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.
பின்பு பொங்கல், மஞ்சள், கரும்பு ஆகியன படையலிட்டு சூரியன் உள்ளிட்ட இயற்கை கடவுள்களுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
சமத்துவ பொங்கல்
இந்த விழாவில்
இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ
மதங்களைச் சேர்ந்த குருமார்கள்
உற்சாகத்துடன் கலந்து கொண்டு
சமத்துவ பொங்கலிட்டனர்.
பொங்கல் வாழ்த்து
இந்த சமத்துவ பொங்கல் விழாவில்
மேயர் சத்யா,
ஆணையாளர் சபீர் ஆலம்
துணை மேயர் ஆனந்தய்யா,
சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன்.
மாநகர சுகாதார அலுவலர் அஜிதா.
ஆகியோர் பங்கேற்று
விழாவில் கலந்து கொண்ட
அனைவருக்கும்
பொங்கல் வாழ்த்து கூறினார்கள்.
சீருடைகள்
துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.
கலைநிகழ்ச்சிகள்
பள்ளி குழந்தைகளின்
கலை நிகழ்ச்சிகளுடன்
சிலம்பம்,
கோலப்போட்டி
உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில்
மாமன்ற உறுப்பினர்கள்
ரவி, இந்திராணி, மருத்துவர் லட்சுமி
உட்பட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
-----------------------------------.