கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
இடையநல்லூரில் தமிழ் புத்தாண்டு
முன்னிட்டு
மாபெரும் கபாடி போட்டி
முதல் பரிசு
ரூ.50 ஆயிரம்,
வென்ற
மது பிரதர்ஸ் (B) அணி
இரண்டாவது பரிசு
ரூ.30 ஆயிரம் வென்ற
அஞ்செட்டி S.K. பிரதர்ஸ் அணி
ஓசூர். ஏப்ரல். 15. –
தமிழ் புத்தாண்டு
மாபெரும் கபாடி போட்டி
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திகிரி இடையநல்லூர் கிராமத்தில்
இடையநல்லூர் இளைஞர் விளையாட்டு சங்கம்(EYSA) சார்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி நடைபெற்றது.
இதில்
பாகலூர் மது பிரதர்ஸ்(B) அணி வீரர்கள் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று
முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம் மற்றும் கோப்பையை வென்றனர்.
இடையநல்லூர்
இளைஞர் விளையாட்டு
சங்கம்(EYSA)
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திகிரி
இடையநல்லூர் கிராமத்தில்
இடையநல்லூர் இளைஞர் விளையாட்டு சங்கம் (EYSA) இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில் இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில்
கபாடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ்
நடப்பாண்டில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி நடைபெற்றது.
மத்திகிரி இடையநல்லூரில் ஏப்ரல் 14-ம் தேதி நடந்த இந்த கபாடி போட்டியை ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கி வைத்து கபாடி வீரர்களை வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில்
இடையநல்லூர் இளைஞர்
விளையாட்டு
சங்கத் தலைவர் -
S.குமாரசாமி,
செயலாளர் –
K. ரமேஷ்,
பொருளாளர் –
M.கோதண்டராமன்,
ஆலோசகர் -
S.மனோகரன்,
ஆலோசகர் –
P.G.மூர்த்தி,
ஆலோசகர் –
K.சாகப்பா(CPM),
சட்ட ஆலோசகர் –
ஆனந்தன்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓசூர் மாநகர மண்டலக்குழு
தலைவர் ஜெயபிரகாஷ்
இந்த கபாடி போட்டி நிகழ்வில்
சிறப்பு விருந்தினராக
ஓசூர் மாநகர கவுன்சிலரும்,
மண்டலக் குழு தலைவருமான
ஜெ.பி. என்கிற ஜெயபிரகாஷ்
பங்கேற்று கபாடி வீரர்களை வாழ்த்தினார்.
மற்றும்
சிறப்பு விருந்தினராக
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்,
நாகொண்டப்பள்ளி ஊராட்சிமன்ற தலைவர்,
முன்னாள் மாவட்ட கபாடி கேப்டன்
லட்சுமைய்யா
கலந்து கொண்டார்.
இந்த கபாடி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு
முதல் பரிசாக ரூ.50ஆயிரம்,
இரண்டாவது பரிசாக ரூ.30 ஆயிரம்,
மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம்,
நான்காம் பரிசாக ரூ. 15 ஆயிரம்
என பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்டு
போட்டி நடைபெற்றது.
நடுவர்கள்
இந்த கபாடி போட்டி நடுவர்களாக
செந்தில்,
நரசிம்மன்,
சிவா,
மாரி,
தேவா,
சசி,
ஆகிய 6 பேர் நடுவர்களாக செயல்பட்டனர்.
இதில் மத்திகிரி
இடையநல்லூர் ஜாக் பிரதர்ஸ் அணி,
குசுணிப்பாளையம் அணி,
சூளகிரி முனியப்பன் அணி,
பாகலூர் மது பிரதர்ஸ் – A அணி,
மது பிரதர்ஸ் – B அணி,
அஞ்செட்டி S.K. பிரதர்ஸ் அணி,
ஓசூர் அதியமான் காலேஜ் அணி,
ஜோதி பாபுலே அணி,
உட்பட 11 கபாடி அணியினர் கலந்து கொண்டு விளையாடினார்கள்.
கபாடி போட்டியில் அனைத்து அணி வீரர்களும் உற்சாகமாக களத்தில் இறங்கி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
அரையிறுதி
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த கபாடி போட்டிகளில்,
அரையிறுதிக்கு
அஞ்செட்டி S.K.பிரதர்ஸ் அணியும், இடையநல்லூர் ஜாக் பிரதர்ஸ் அணியும்,
மது பிரதர்ஸ் A மற்றும் B ஆகிய இரண்டு அணிகளும் என 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
முதல் அரையிறுதி
பின்பு நடந்த முதல் அரையிறுதியில்
அஞ்செட்டி S.K.பிரதர்ஸ் – இடையநல்லூர் அணி வீரர்கள் விளையாடினர்.
இதில்
அஞ்செட்டி S.K. பிரதர்ஸ் அணியினர் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இரண்டாவது அரையிறுதி
மது பிரதர்ஸ் A மற்றும் B ஆகிய இரண்டு அணியினரும் விளையாடினர்.
இதில் மது பிரதர்ஸ் B அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதிப்போட்டி
இறுதிப்போட்டியில்
அஞ்செட்டி S.K. பிரதர்ஸ் அணியும்,
மது பிரதர்ஸ் B அணியும்
விளையாடினர்.
இரு அணி வீரர்களுக்கு இடையே முதல் பரிசை தட்டிச் செல்வது யார்?, என்பதில் கடுமையான போட்டி நிலவியது.
இரண்டு அணி வீரர்களும் திறமையாக விளையாடியதால், புள்ளிப்பட்டியலில் இரு அணிகளுக்கும் இடையே குறைந்த இடைவெளியே காணப்பட்டது.
போட்டியின் ஒரு கட்டத்தில்
மது பிரதர்ஸ் அணி 14 புள்ளிகளும், அஞ்செட்டி அணி 11 புள்ளிகளும் பெற்றிருந்தனர்.
கடைசி கட்டத்தில்
அனல் பறந்த, மிகவும் விறு விறுப்பாக நடந்த இந்தப் கபாடி
இறுதிப்போட்டியில்
மது பிரதர்ஸ் B அணி
வீரர்கள் சிறப்பாக விளையாடி,
வெற்றி பெற்றனர்.
முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், கோப்பையும் வென்றனர்.
முதல் பரிசு
மது பிரதர்ஸ் அணிக்கு முதல் பரிசாக
ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையை
ஓசூர் ஸ்ரீராம் புரோமோட்டர்ஸ்,
புரெஜக்ட் மேலாளர்
திரு. மோகன்ராஜ்
சார்பில்
இடையநல்லூர் இளைஞர் விளையாட்டு சங்க ஆலோசகர்கள் பி.ஜி. மூர்த்தி,
கே. சாகப்பா(CPM) மற்றும் சங்க நிர்வாகிகள் வழங்கினார்கள்
இரண்டாம் பரிசு
அஞ்செட்டி S.K. பிரதர்ஸ் அணிக்கு இரண்டாம் பரிசாக ரூ.30ஆயிரம் மற்றும் கோப்பையும்
இடையநல்லூர் எல்ஐசி ஏஜென்ட்,
Zonal Club உறுப்பினர்
திரு. கே. சந்திரசேகர்
வழங்கினார்.
மூன்றாம் பரிசு
மது பிரதர்ஸ் A அணிக்கு
மூன்றாம் பரிசை
இடையநல்லூர் முன்னாள்
பஞ்சாயத்து தலைவர்
S. மனோகரன்
வழங்கினார்.
நான்காம் பரிசு
இடையநல்லூர் ஜாக் பிரதர்ஸ் அணிக்கு நான்காம் பரிசை
ஓசூர் AIRA வென்சர்ஸ்
திருமதி சவுமியா முருகானந்தன்,
வழங்கினார்.
பெஸ்ட் ரைடர்
மேலும் இந்த கபாடி போட்டியில்
சிறப்பாக விளையாடிய
மது பிரதர்ஸ் அணியைச் சேர்ந்த
கபாடி வீரர் கிரண்,
பெஸ்ட் ரைடர் பரிசு பெற்று அசத்தினார்.
அஞ்செட்டி S.K. பிரதர்ஸ்
அணியைச் சேர்ந்த
கபாடி வீரர் மேகநாதன்
பெஸ்ட் டிஃபெண்டராக
பரிசு பெற்றார்.
இந்த இரண்டு பரிசுகளையும் லக்ஷா ஃபேஷன்
உரிமையாளர்
திரு.V.K. சந்துரு
வழங்கினார்.
கபாடி போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கும்,
பார்வையாளர்களுக்கும்
குடிநீர் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
இந்த மாபெரும் கபாடி போட்டி ஏற்பாடுகளை
இடையநல்லூர் இளைஞர் விளையாட்டு சங்கம்(EYSA)
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த கபாடி போட்டியைக் காண இடையநல்லூர், மத்திகிரி, ஓசூர், சூளகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.