ஓசூர் மேக்னம் அரிமா
சங்கம் சார்பில்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான
சிறப்புக்கல்வி
மற்றும் பயிற்சி மையத்தில்
உணர்வு நடைபாதை திறப்பு விழா
அரிமா சங்க மாவட்ட
ஆளுநர் பங்கேற்பு
ஓசூர். மார்ச். 01. –
உணர்வு நடை பாதை
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்புக்கல்வி
மற்றும் பயிற்சி மையத்தில்
உணர்வு நடைபாதை திறப்பு விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில்
உள்ள காமராஜ் காலனி, மாநகராட்சி பள்ளி வளாகத்தில்
“மாற்றுத்திறன்
மாணவர்களுக்கான
சிறப்புக்கல்வி
மற்றும் பயிற்சி மையம்”
இயங்கி வருகிறது.
இந்த மையத்தில் 30 மாற்றுத்திறன் சிறுவர், சிறுமியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இங்கு வட்டார வளமய
மேற்பார்வையாளர்
குமரவேல்
தலைமையில் ஒரு இயன்முறை மருத்துவர்,
நான்கு சிறப்பு பயிற்சியாளர்கள் பணியில் உள்ளனர்.
இந்த மையத்தில்,
மேக்னம் அரிமா சங்கம் சார்பில்
மாற்றுத்திறன் மாணவர்களின் பயிற்சிக்காக
உணர்வு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணர்வு நடைபாதை
வெள்ளை,
பச்சை,
மஞ்சள்,
ஊதா,
ஆகிய நான்கு வண்ணங்களில்
அமைக்கப்பட்டுள்ளது.
இதில் வெள்ளை வண்ணத்தில் கூழாங்கற்களும்.
பச்சை வண்ணத்தில் மென்மையான புல்வெளியும்,
மஞ்சள் வண்ணத்தில் சிறிய ஜல்லி கற்களும்,
ஊதா வண்ணத்தில் பெரிய ஜல்லி கற்களும் பதிக்கப்பட்டுள்ளது.
நான்கு விதமான உணர்வுகள்
இதில் மாற்றுத்திறனாளிகள் நடக்கும் போது நான்கு விதமான உணர்வுகளும் தூண்டப்பட்டு,
நடந்து செல்லும் நிலத்தின் தன்மையை
அறிந்து கொள்ளும் வகையில்
இந்த உணர்வு நடைபாதை
சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணர்வு நடைபாதை திறப்பு விழா மார்ச். 1-ம் தேதி நடைபெற்றது.
இந்த விழாவில் அரிமா சங்க
மாவட்ட ஆளுநர்
அரிமா என்.பி. செந்தில்குமார்,
தலைமை வகித்து,
உணர்வு நடைபாதையை
திறந்து வைத்தார்.
மேக்னம் அரிமா சங்க தலைவர்
அரிமா கே. மகேந்திரன்,
மற்றும்
உணர்வு நடைபாதை திட்டத்துக்கு பங்களிப்பு வழங்கிய
முருககுமரன்(LIC of INDIA)
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதைத் தொடர்ந்து
புதிய உணர்வு நடைபாதையில் மாற்றுத்திறன் குழந்தைகள், புதிய உணர்வுடன், குதுகலத்துடன் நடை பயின்றனர்.
சிறப்புரை
அரிமா மாவட்ட ஆளுநர் சிறப்புரையில் பேசியதாவது,
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம், மக்களுக்கு எது தேவையோ அதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 188 அரிமா சங்கங்களில், மேக்னம் அரிமா சங்கம் வித்தியாசமாக சிந்திக்கும்
சங்கமாக உள்ளது.
பாராட்டு
நான் இதுவரை 131 விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன்.
அதில் இந்த விழா மனதுக்கு மிகவும் பிடித்த விழாவாக உள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேவையானதை சிறப்பாக செய்து கொடுத்துள்ளனர்.
இதற்காக ஒசூர் மேக்னம் அரிமா சங்க தலைவர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகளை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பயிற்சி மையம் சார்பில்
அரிமா சங்க மாவட்ட ஆளுநர்
அரிமா என்.பி. செந்தில்குமார்,
திருமதி அரிமா ஆர்.எஸ். புஷ்பலதா செந்தில்குமார்,
மற்றும் அரிமா சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும்
மேக்னம் அரிமா சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் தற்போதைய நிர்வாகிகளின்
சேவையை பாராட்டி
பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவில்
ஓசூர் மேக்னம் அரிமா சங்க
செயலாளர்(நிர்வாகம்)
அரிமா என்.கண்ணன்,
செயலாளர்(திட்டம்)
அரிமா ஆர். ரவிசங்கர்,
பொருளாளர்
அரிமா பி. மாதேஷ்குமார்,
இயன்முறை மருத்துவர்
அசோக் நெல்சன்,
சிறப்பு பயிற்சியாளர்கள்
ஹேமலதா,
சரளா,
நித்யா,
எமிலி ஸ்டெல்லா
ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
---------------------------------------------------.