கெலமங்கலம் சின்னடி கிரிக்கெட்
கிளப் சார்பில்
6-வது ஆண்டு கிரிக்கெட் போட்டி
முதல் பரிசாக – கோப்பையுடன்
ரூ.30 ஆயிரம் வழங்கிய
தளி எம்எல்ஏ.
ஓசூர். ஜனவரி. 24. -
சின்னடி கிரிக்கெட் கிளப்
கெலமங்கலம் அருகே 6-வது ஆண்டாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு, முதல் பரிசு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பையை தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் சார்பில் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சியில் உள்ள சின்னடி கிராமத்தில் கிரிக்கெட் கிளப் இயங்கி வருகிறது.
இந்த கிரிக்கெட் கிளப் சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகள்
மிகவும் சிறப்பாக
நடத்தப்பட்டு வருகிறது.
சின்னட்டி கிராமம்
ஊர் கவுண்டர் ஜெயராமன்
அதேபோல 2025-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி சின்னடி கிரிக்கெட் கிளப் சார்பில்
6-வது ஆண்டு கிரிக்கெட் போட்டி
நடைபெற்றது.
சின்னடி பேருந்து நிலையம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியை
சின்னட்டி கிராம ஊர் கவுண்டர் ஜெயராமன் தலைமை வகித்து
துவக்கி வைத்தார்.
30 அணிகள் பங்கேற்பு
இந்த கிரிக்கெட் போட்டியில் கெலமங்கலம், சின்னட்டி உட்பட 30 அணிகளின் வீரர்கள் பங்கேற்று உற்சாகத்துடன் விளையாடினர். இறுதிப் போட்டியில்
கெலமங்கலம் அணி வீரர்கள் முதல் பரிசையும்,
சின்னட்டி அணியினர் இரண்டாவது பரிசையும்
தட்டிச் சென்றனர்.
கெலமங்கலம் அணிக்கு,
முதல் பரிசாக
தளி எம்எல்ஏ டி. ராமச்சந்திரன்
சார்பில் ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல சின்னட்டி அணிக்கு இரண்டாவது பரிசு,
திருமதி பிரபா ஜெயராமன்
சார்பில் வழங்கப்பட்டது.
இந்த கிரிக்கெட் போட்டி நிகழ்வில்
ஜெயராமன். கருணாநிதி. முரளி ஜே. ஜே. பிரகாஷ், ராஜசேகர், முருகன், ஸ்ரீநிவாஸ், ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகளை சின்னட்டி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி மக்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.