கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
புகையில்லா போகி பண்டிகை
கொண்டாடும் வகையில்
பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் முன்னிலையில் தூய்மையான நகரத்திற்கான
உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஓசூர் மாநகராட்சி
அனைத்து வார்டுகளிலும்
மக்கள் தங்களுக்கு பயன்படாத பொருட்களை
தெருக்களில் வீசி எரிக்காமல் மாநகராட்சி
தூய்மை பணியாளர்களிடம்
வழங்க விழிப்புணர்வு
ஓசூர். ஜன. 12. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சியில்
"புகையில்லா போகி"
பண்டிகை கொண்டாடும் வகையில்
மாநகராட்சி ஆணையர்
திரு.முகமது ஷபீர் ஆலம் இ.ஆ.ப.
அவர்கள் தலைமையில்
இன்று (12.01.2026) ஓசூர் மாநகராட்சியின்
அனைத்து வார்டுகளிலும் மக்கள் தங்களுக்கு
பயன்படாத பொருட்களை
தெருக்களில் வீசி எரிக்காமல்
மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம்
வழங்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தெருக்களில் குப்பை கொட்டும்
இடங்களை சுத்தம் செய்தும்,
கோலமிட்டும், பூச்செடிகளை வைத்து வேலி அமைத்தும் அழகு செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகையின் போது
வீடுகளை சுத்தம் செய்து,
தேவையற்ற பயன்படாத கழிவுகளான
பழைய துணிகள்,
மெத்தைகள்,
தலையணைகள்,
உடைந்த உபயோகமற்ற
பழைய மரச்சாமான்கள்,
பிளாஸ்டிக் பொருட்கள்
மற்றும் டயர்
போன்றவற்றை
தெருவில் போட்டு எரியூட்டுவர்.
இதனால் காற்று மாசு அடைவதுடன்
சுற்றுசூழலுக்கு மிகவும்
கேடான செயலாகும்.
45 வார்டுகளிலும் விழிப்புணர்வு
அதனை தடுக்கும் விதமாக
மாநகராட்சியில் 45 வார்டுகளிலும்,
வீடுகளில் சேகரிக்கப்படும்
பழைய பொருட்கள்,
அப்பகுதியில் உள்ள
தூய்மை பணியாளர்களிடம்
ஒப்படைக்கப்பட வேண்டும்.
அவ்வாறு பெற்ற பொருட்களானது
அப்பகுதியில் உள்ள கழிவு சேகரிக்கும்
மையத்தில் சேகரிக்கப்பட்டு
மறு சுழற்சிக்கு அனுப்பும் வகையில்
மாநகராட்சி நிர்வாகத்தினால்
ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
குப்பையில்லா திருவிழா
மேலும்
மாநகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே
உள்ள குப்பை கூளங்களை
மாநகராட்சி பணியாளர்கள்,
குடியிருப்போர் சங்கம் மற்றும்
தன்னார்வ அமைப்புகள் மூலம்
சுத்தம் செய்யப்பட்டு,
கோலங்கள் போடப்பட்டு மற்றும்
செடிகள் நடப்பட்டு குப்பையில்லா
திருவிழாவாக இப்போகி பண்டிகையை
ஓசூர் மாநகராட்சி கொண்டாட
நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முத்துராயன் ஜீபி
இதன் ஒரு பகுதியாக
முத்துராயன் ஜீபி பகுதியில் உள்ள
அரசு பள்ளிக்கு அருகில் கொட்டப்படும்
குப்பையை பொது மக்கள் பங்களிப்புடன்
ஆணையாளர் மற்றும்
மக்கள் பிரதிநிதிகள்
சுத்தம் செய்து
கோலங்கள் இடப்பட்டு செடிகள் நடப்பட்டது.
மேலும்
RRR (Reduce, Reuse, Recycle)
பற்றிய விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு
மாணவர்களிடம் சேகராமாகும்
துணிகள்,
பொம்மைகள்,
புத்தகங்கள்,
போன்றவற்றை பள்ளிளில் வைக்க
எதுவாக அலமாரிகள் கொடுத்து
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உறுதிமொழி ஏற்பு
மேலும் அப்பகுதியில் உள்ள
பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின்
முன்னிலையில்
தூய்மையான நகரத்திற்கான
உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்
மாநகராட்சி ஆணையர்,
திரு. முகமது ஷபீர் ஆலம்.இஆப.
பொது சுகாதார குழு தலைவர்
திரு. N.S. மாதேஸ்வரன்,
வரி விதிப்பு மற்றும்
நிதிக் குழுமண்டல தலைவர்
திரு. சென்னீரப்பா,
2வது மண்டலக்குழு தலைவர்
திருமதி. காந்திமதி கண்ணன்,
34வது வார்டு கவுன்சிலர்
திருமதி. வரலட்சுமி,
மாநகர நல அலுவலர்
திருமதி. அஜிதா,
மற்றும் துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்
மற்றும் பொது மக்கள்
கலந்து கொண்டனர்.
-------------------------------.