சுயம்பு கோட்டை
ஸ்ரீ மாரியம்மன் மலர் மாலைகள்
விற்பனை வளாகம் திறப்பு விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூரில், பேருந்து நிலையம் எதிரே
பிரம்மாண்டமான வளாகத்தில்
40-க்கும் மேற்பட்ட அங்காடிகளுடன்
சுயம்பு கோட்டை ஸ்ரீ மாரியம்மன்
மலர் மாலைகள் விற்பனை வளாகம்
திறப்பு விழா.
ஓசூர். டிச. 11. -
சுயம்பு கோட்டை ஸ்ரீமாரியம்மன்
மலர் மாலைகள் விற்பனை அங்காடிகள்
வளாகம் திறப்பு விழா
ஓசூர் மாநகரில் மையப் பகுதியான
பேருந்து நிலையம் எதிரே
1000-க்கும் மேற்பட்டோர்
பயனடையும் வகையில்
பிரம்மாண்டமான வளாகத்தில்
40-க்கும் மேற்பட்ட அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ள
சுயம்பு கோட்டை ஸ்ரீமாரியம்மன்
மலர் மாலைகள் விற்பனை அங்காடிகள்
வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.
சுயம்பு கோட்டை ஸ்ரீமாரியம்மன்
உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜை
டிசம்பர் 11-ம் தேதியன்று நடந்த
இந்த திறப்பு விழாவுக்கு
முன்னதாக அம்மன் உற்சவ மூர்த்திக்கு
சிறப்பு அலங்காரங்களுடன்
ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
திறப்பு விழா
அதை தொடர்ந்து
திரு. கே.டி.ஆர்
மற்றும்
திரு. ஜெய்சங்கர்
ஆகியோர் மற்றும்
மலர் மாலைகள் தயாரிக்கும்
விற்பனையாளர்களின்
குடும்பத்துடன் சேர்ந்து,
கே.டி.ஆரின் பேத்தியான
பச்சிளம் குழந்தை
சிறப்பு விருந்தினராக பங்கேற்று
ரிப்பன் வெட்டி
திறப்பு விழா கோலாகலமாக
நடைபெற்றது.
அறுசுவை விருந்து
அம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்திக் கடன்
செலுத்தி அறுசுவை உணவுகள்
பரிமாறப்பட்டு மகிழ்ச்சி
கொண்டாடத்துடன் நிகழ்ச்சி
வெகு விமர்சையாக நடைபெற்றது.
1000 மலர் மாலைகள்
விற்பனையாளர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகரின் மையப் பகுதியான
பேருந்து நிலையம் எதிரே
தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான
மேம்பாலத்திற்கு கீழ்
பல ஆண்டுகளாக சுமார் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட மலர் மாலைகள்
விற்பனையாளர்கள்
சிறு கடைகள் அமைத்து
வாழ்வாதாரத்தை
மேற்கொண்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் மாநகரில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம்
உள்ள நிலையிலும்,
வாகன எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில்
போக்குவரத்து நெரிசல் கடுமையாக
பொதுமக்களை பாதித்திருந்தது.
குறிப்பாக பேருந்து நிலையம்
எதிரே ஏராளமான மக்கள் நடைபாதைகளை
அதிகம் பயன்படுத்துவதால்
மக்கள் நடமாட்டமும்
நெரிசலுடன் காணப்பட்டது.
இதன் காரணமாக
தேசிய நெடுஞ்சாலை துறையினரால் மேம்பாலத்திற்கு கீழே கடைகள் அமைத்து மலர் மாலைகள் விற்பனை செய்து வந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதனால் பல ஆண்டுகளாக
இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் வாழ்வாதாரமின்றி வறுமையின் பிடியில் சிக்கி தவித்தனர்.
இந்த நிலையில்
ஓசூர் மலர் மாலைகள்
தயாரிப்பாளர்கள்
சங்கத் தலைவரான
திரு. கே.டி.ஆர்
என அனைவராலும் அன்போடு
அழைக்கப்படும்
திரு. திம்மராஜ்,
அவர்கள் மலர் மாலைகள் வியாபாரிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண தீவிர முயற்சிகளை
மேற்கொண்டார்.
அதன்பலனாக
ஓசூர் பேருந்து நிலையம் எதிரே
ஜே.பி.டி குழுமத்தில் ஒருவரான
திரு. ஜெய்சங்கர்.
என்பவருக்கு சொந்தமான
நரசிம்மா காம்ப்ளக்ஸ்
செயல்பட்டு வந்ததை அறிந்த
திரு. கே. டி. ஆர், அவர்கள்
திரு. ஜெய்சங்கர் அவர்களை அணுகி
மலர் மாலைகள் விற்பனை செய்பவர்களின்
நிலைமை குறித்து எடுத்துரைத்து
பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில்
நரசிம்மா காம்ப்ளக்ஸ்
உரிமையாளர்
திரு. ஜெய்சங்கர்
அவர்கள் பரந்த மனப்பான்மையுடனும்,
மகிழ்ச்சியுடனும் தனது காம்ப்ளக்ஸ் இடத்தை
மலர் மாலைகள் தயாரிப்பு, விற்பனைக்காக
பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க
முன்வந்தார்.
இதனால் மலர் மாலைகள்
விற்பனை செய்யும் வியாபாரிகள்
மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் அந்தப் பகுதியில்
மலர் மாலைகள் தயாரித்து
விற்பனை செய்யும் 40 அங்காடிகளுடன்
விற்பனை வளாகம் அமைக்கப்பட்டு,
டிசம்பர் 11-ம் தேதியன்று
திறப்பு விழா நடைபெற்றது.
அம்மனுக்கு சிறப்பு பூஜை
அதைத் தொடர்ந்து
டிச.10-ம் தேதி மாலை
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல்
பழமை வாய்ந்த சுயம்பு அருள்மிகு
ஸ்ரீ கோட்டை மாரியம்மன் ஆலயத்தில்
அம்மன் உற்சவருக்கு அலங்காரங்கள்
செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.
வானவேடிக்கை
மேளதாளங்கள் முழங்க
ஸ்ரீ கோட்டை மாரியம்மன் உற்சவமூர்த்தி
தோளில் சுமந்து ஊர்வலம்
பின்னர் பட்டாசுகள் வெடித்து
வரிசை பம்பை, உடுக்கை, நாதஸ்வரம்
உள்ளிட்ட மேள தாளங்கள் முழங்க
திருக்கோயிலில் இருந்து
அலங்கரிக்கப்பட்ட
ஸ்ரீ கோட்டை மாரியம்மன் உற்சவமூர்த்தி
தோளில் சுமந்து கொண்டு பக்தர்கள்
மற்றும் மலர் மாலை தயாரித்து
விற்பனை செய்பவர்கள் என
ஏராளமானோர் நகரின் பிரதான வீதிகள்
வழியாக எடுத்து வந்து,
மலர் மாலைகள் வணிக வளாகத்தில்
உற்சவ மூர்த்தி அம்மனுக்கு
சிறப்பு பூஜைகள் மற்றும்
ஆராதனைகள் நடத்தினார்கள்.
காளியாட்டம்
மேலும் இரவு பாரம்பரிய
நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான
காளியாட்டம் நிகழ்ச்சியில்
நாட்டிய கலைஞர்கள் காளி வேடம் அணிந்து நடனமாடி அசத்தியது பார்ப்பவர்களை
வெகுவாக கவர்ந்தது.
இதைத்தொடர்ந்து டிச.11-ம் தேதி காலை
முக்கிய நிகழ்வான,
ஓசூர் சுயம்பு அருள்மிகு
ஸ்ரீ கோட்டை மாரியம்மன்
மலர் மாலைகள் விற்பனை அங்காடிகள்
வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.
நெஞ்சார்ந்த நன்றிகள்
மலர் மாலைகள் தயாரித்து
விற்பனை செய்யும் சுமார் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட குடும்பத்தாரின்
வாழ்வாதாரத்திற்கு உதவி செய்த
திரு. ஜெய்சங்கர்
அவர்களுக்கு
திரு. கே. டி. ஆர்.
மற்றும் மலர் மாலை விற்பனையாளர்கள்
சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்
தெரிவித்தனர்.
இந்த வளாகத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட
அங்காடிகள் செயல்பட உள்ள நிலையில்
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்
மிகுந்த பயனடைவார்கள் என
விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
-------------------------------------.