பெங்களுரு ஆனேக்கல் நகரத்தில்
ஆயிரம் ஆண்டுகள் பழமையான
புகழ்பெற்ற திம்மராய சுவாமி
திருக்கோயிலில்
வைகுண்ட ஏகாதசி
சொர்க்கவாசல் திறப்பு
லட்சக்கணக்கான மலர்களில்
அமைக்கப்பட்ட
சொர்க்கவாசல்
லட்சக்கணக்கான
பக்தர்கள் பங்கேற்பு
ஓசூரைச் சேர்ந்த
அரிமா.
டாக்டர். ஒய்.வி.எஸ். ரெட்டிக்கு
பாராட்டு
ஓசூர். ஜனவரி. 11. –
ஆனேக்கல்
ஸ்ரீதிம்மராய சுவாமி
திருக்கோயில்
ஓசூர் அருகே பெங்களுரு மாவட்டம் ஆனேக்கல் தாலுகா, சகாதேவபுராவில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான
உலகப் புகழ் பெற்ற ஸ்ரீதிம்மராயசுவாமி திருக்கோயிலில்
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு
வெகு சிறப்பாக நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசி
ஸ்ரீதிம்மராயசுவாமி கோயிலில்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு
அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம்,
அலங்காரம் செய்து, சுவாமிக்கு
சிறப்பு பூஜை, மகாமங்களாரத்தி மற்றும்
பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
சொர்க்க வாசல் திறப்பு
சொர்க்க வாசல் திறப்பு தரிசனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த வைகுண்ட ஏகாதசி சொர்கவாசல் திறப்பு பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா,
என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பகவத் கீதை பிரசங்கம்
தொடர்ந்து, மதியம் ஆனேக்கல் ராதாகிருஷ்ணா கோலாட்டம் சங்கத்தினரின்
கோலாட்டம் நிகழ்ச்சி,
ஸ்ரீதிம்மராயசுவாமி பஜனை
குழுவினரின்
விஷ்ணு சகஸ்ரநாமா பாராயணம்
நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு கர்நாடகா நிருபா பைன் ஆர்ட்ஸ் அகடமியின் கலாஸ்ரீ ரூபா ராஜேஷ் குழுவினரின்
குச்சுப்புடி
நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
லட்சக்கணக்கான வண்ணமலர்களை
பயன்படுத்தி கலை நயத்துடன்
பிரம்மாண்டமான
சொர்க்க வாசல்
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு ஸ்ரீதிம்மராய சுவாமி கோயில் முழுவதும்
லட்சக்கணக்கான வண்ணமலர்கள்
பயன்படுத்தி கலை நயத்துடன்
பிரம்மாண்டமான
சொர்க்க வாசல் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த வண்ணமயமான, மலர் வாசம் கமழும் சொர்க்கவாசலை லட்சக்கணக்கான பக்தர்கள் ஆச்சரியத்துடன்
சுற்றி வந்து பிரமித்தபடி கண்டுகளித்தனர்.
இந்த வண்ணமலர்களால் ஆன
சொர்கவாசலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதிம்மராய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு
பிரசாதமாக
லட்டு
அவல்
ஆகியவை
வழங்கப்பட்டது.
அரிமா. டாக்டர். ஒய்.வி.எஸ். ரெட்டி
சேவையை பாராட்டி கவுரவிப்பு
வைகுண்ட ஏகாதசி சொர்கவாசல் திறப்பு
சிறப்பு பூஜை முன்னிட்டு கோயில் மண்டபத்தில்
அரிமா சங்க மூத்த நிர்வாகியும்,
ஸ்ரீதிம்மராயசுவாமி கோயில் மேம்பாட்டுக்குழு
பொருளாளருமான
அரிமா. டாக்டர்.
ஒய்.வி.எஸ். ரெட்டி
சேவையை பாராட்டி கவுரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கர்நாடக மாநில வனத்துறையின் முன்னாள் முதன்மை தலைமை அதிகாரியும்,
ஸ்ரீதிம்மராய சுவாமி கோயில் மேம்பாட்டுக்குழு
தலைவருமான
டாக்டர் முனி ரெட்டி
பங்கேற்று
ஒய்விஎஸ் ரெட்டியை பாராட்டி
மைசூர் தலைப்பாகை,
பொன்னாடை
அணிவித்தார்.
தொடர்ந்து,
தீர்த்த ரூப சுவாமிஜி
சந்தன மாலை
அணிவித்து பாராட்டினார்.
இந்த நிகழ்வில் ஸ்ரீதிம்மராயசுவாமி கோயில் மேம்பாட்டுக்குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆனேக்கல் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல்
திறப்பு பூஜையில் கர்நாடகா பெங்களுரு ஆனேக்கல், அத்திப்பள்ளி, ஜிகனி, மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை,
தளி, ஓசூர், சூளகிரி மற்றும் ஆந்திரா
ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
குடும்பத்தோடு வருகை தந்து ஸ்ரீதிம்மராய சுவாமியை தரிசித்தனர்.
ஸ்ரீதிம்மராயசுவாமி கோயில் மேம்பாட்டுக்குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.