நேற்றைய வரலாறு - இன்றைய பாடம்
-----------------------------------------------------------
வேதியலுக்கான
நோபல் பரிசு
பெற்ற முதல் அமெரிக்க விஞ்ஞானி
தியோடர் வில்லியம் ரிச்சர்ட்சு
(Theodore William Richards)
ஜனவரி 31 – 1868.
வேதியியல் விஞ்ஞானி தியோடர்
வில்லியம் ரிச்சர்ட்சு –
157-வது பிறந்ததினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜனவரி. 31. –
வேதியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் அமெரிக்க அறிவியலாளரான தியோடர் வில்லியம் ரிச்சர்ட்சு (Theodore William Richards)
அதிக எண்ணிக்கையிலான வேதியியல் தனிமங்களின் அணு எடைகளைத் துல்லியமாகக் கண்டறிந்தமைக்காக இந்த விருதினைப் பெற்றார்.
தியோடர் வில்லியம் ரிச்சர்ட்சு
1868-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பென்சில்வேனியாவில் ஜெர்மன்டவுன் என்ற இடத்தில் பிறந்தார்.
இவரது தந்தை
வில்லியம் டிராஸ்ட் ரிச்சர்ட்ஸ்,
நிலம் மற்றும் கடல் தளங்களை
வரையும் ஓவியர்.
இவரது தாய்
அன்னா நீ மட்லாக்
ஒரு சிறந்த கவிஞர் ஆவார்.
சனிக் கோள் வளையம்
ஒரு கோடைக்காலத்தில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோசையா பார்சன்சு குக் என்பவருடன் ரோட் தீவுகளின் நியூபோர்ட்டில் தங்கியிருந்த போது, ஒரு சிறிய தொலைநோக்கியின் மூலம் சனிக்கோளின் வளையங்களை தியோடர் ரிச்சர்ட்சுக்கு காண்பித்தார் குக். இதிலிருந்து ரிச்சர்ட்சு குக்குடன் இணைந்து அவரது ஆய்வகத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
அறிவியலில் ஆர்வம்
1878-இல் தொடங்கி, ரிச்சர்ட்ஸ் குடும்பம் ஐரோப்பாவில் இரண்டு ஆண்டுகள் கழித்தது. பெரும்பாலும் இங்கிலாந்தில், தியோடர் ரிச்சர்ட்ஸின் அறிவியல் ஆர்வங்கள் வலுவாக வளர்ந்தன. குடும்பம் அமெரிக்காவிற்குத் திரும்பிய பிறகு, 1883 ஆம் ஆண்டில் 14 வயதில் பென்சில்வேனியாவின் ஹேவர்போர்ட் கல்லூரியில் நுழைந்தார்.
கலை மற்றும் இசையில் ஆர்வம்
1885 ஆம் ஆண்டில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். ரிச்சர்ட்சு கலை மற்றும் இசை இரண்டிலும் ஆர்வத்தைக் கொண்டிருந்தார்.
இவரது பொழுதுபோக்குகளில் ஓவியம், கோல்ஃப் மற்றும் படகோட்டம் ஆகியவை அடங்கும்.
அணு எடை ஆராய்ச்சியில் ஆர்வம்
ரிச்சர்ட்சு ஹார்வர்டில் பயிலுவதைத் தொடர்ந்தார், ஹைட்ரஜனுடன் ஒப்பிட்டு ஆக்ஸிஜனின் அணு எடையை நிர்ணயிப்பதை தனது ஆய்வுக் கட்டுரையாக எடுத்துக் கொண்டார்.
55 தனிமங்களின் அணு எடை ஆய்வு
1889 ஆம் ஆண்டில் ஹார்வர்டுக்குத் திரும்பியதும், இதுவே அவரது முதல் ஆய்வாக இருந்தது. ரிச்சர்ட்ஸின் அறிவியல் ஆராய்ச்சியில் பாதியளவிற்கு அணு எடைகளைப் பற்றியதாகவே இருந்தது.
1932 வாக்கில் ரிச்சர்ட்ஸ் மற்றும் அவரது மாணவர்களால் 55 தனிமங்களின் அணு எடைகள் ஆய்வு செய்யப்பட்டன.
தூலியம் - 15000 முறை ஆய்வு
தூலியத்தின்(Thulium) துல்லியமான அணு எடையைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு தூய தூலியத்தைப் பெறுவதற்காக இவர் இத்தனிமத்தை 15000 முறை படிகமாக்கியுள்ளார்.
வேதியியல் பகுப்பாய்வின் மூலம், ஒரு தனிமம் வெவ்வேறு அணு எடையைக் கொண்டிருக்க முடியும் என்பதை முதலில் ரிச்சர்ட்சு தான் உலகிற்குக் கூறியவர் ஆவார்.
கதிரியக்கச் சிதைவால் உற்பத்தி செய்யப்படும் ஈயம், இயற்கையான ஈயம் ஆகியவற்றின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய இவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
இவரது அளவீடுகள் இரண்டு மாதிரிகளும் வெவ்வேறு அணு எடைகளைக் கொண்டிருப்பதைக் காட்டின. இது ஐசோடோப்புகளின் கருத்துக்களை ஆதரிப்பவையாக இருந்தது.
--------------------------------------------.