நாமும் நமது சந்ததியினரும்
நலம்பெற
நாளும்
வனம்
காப்போம்!
மார்ச் 21 - உலக வன நாள்
2025 கருப்பொருள்:
"காடுகள் மற்றும் உணவு",
"Forests and Food,"
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மார்ச். 21. –
"காடுகள் மற்றும் உணவு"
இந்த 2025 ஆண்டுக்கான கருப்பொருள் "காடுகள் மற்றும் உணவு", இது காடுகளுக்கும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கும் இடையிலான ஆழமான தொடர்பை வலியுறுத்துகிறது.
இந்தியாவில் காடுகள் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன, மேலும் அவற்றின் பாதுகாப்பு என்பது சுற்றுச்சூழல் தேவை மட்டுமல்ல, அடிப்படைப் பொறுப்பாகும்.
உலக வன நாள்
ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டம் 2012-ல் நடந்தது. அப்போது வன வளத்தை பாதுகாக்கவும், அதனைப் பற்றிய விழிப்புணர்வை உலகளவில் உணர்த்தவும் மார்ச் 21-ம் தேதியை உலக வன நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
மனித வாழ்விற்கு இன்றியமையாத
பல்வேறு பொருட்களை வனங்கள்
நமக்கு தருகின்றன.
நமது அன்றாடத் தேவைகளான
தடிமரம்,
விறகு,
கால்நடை தீவனம்,
பசுந்தழை,
மருத்துவ மூலிகைகள்
என பல்வேறு பொருட்களையும்
நமக்கு தாராளமாக
வழங்குகின்றன.
வனங்கள் என்பது
நம் வாழ்வாதாரத்திற்கு
தேவையான
நல்ல நீரையும்,
தூய காற்றையும்,
உணவு உற்பத்தி சிறக்க உதவும் மேல் மண்ணையும்,
அள்ளித் தரும் கொடை வள்ளல்கள்.
வனங்கள் நமக்கு ஆற்றும் பல்வேறு பணிகளை நினைவுகூர்ந்து வனவளத்தை பேணிக் காக்க உறுதி ஏற்கும் நாள் உலக வன நாள்.
காடுகள் என்பது அதில் வாழும்
தாவரங்கள்,
விலங்கினங்கள்,
பறவைகள் பூச்சி இனங்கள்,
நுண்ணுயிர்கள்,
ஆகிய அனைத்தையும் கொண்ட
ஒரு தொடர் இயக்கத்தின்
கூட்டமைப்பாகும்.
கடலில் இருந்து ஆவியான
நீர்
மேகமாகி மழையாகப்
பொழிந்து
அருவியாக விழுந்து
ஆறாக ஓடி
வழியில் உள்ள நீர்நிலைகளை
நிரப்பி
இறுதியில்தான் பிறந்த
கடலிலேயே சங்கமமாகிறது.
அதேபோல
கார்பன்,
ஹைட்ரஜன்,
ஆக்சிஜன்,
சுழற்சியின் மூலம்
உயிரினங்களுக்கும்,
சுற்றுச்சூழலுக்கும் ஒரு சிலந்தி வலை போல ஒரு சூழல் வலை பின்னப்பட்டுள்ளது.
மனிதர்களாகிய நாம் இந்த சூழல் சுழற்சியில் ஒரு அங்கமே.
இதனை உணர்ந்து நாம் நமது சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்.
இல்லை என்றால் நமது எதிர் காலம் கேள்விக்குறியாகி விடும்.
நீரை சேமித்து வைக்க
உதவும் காடுகள்
காடுகள் நிறைந்த நீர்ப்பிடிப்பு பகுதி அடித்துப் பெய்யும் மழையில் இருந்து மண்ணை அரவணைத்து பாதுகாக்கவும், பெய்த மழைநீர் வேர்கள் மூலமாக சிறிது சிறிதாக உறிஞ்சப்பட்டு சிறு சிறு நீர் தேக்கம் போல நீரை சேமித்து வைக்கவும் பயனாகிறது.
ஏந்தல்
இந்த நீர் கோடையிலே
சுனை நீராகக் கனிந்து
வெளியே வருகிறது.
இதனால் தான் காடுகளுக்கு ஏந்தல்
என்ற காரணப் பெயர் ஏற்பட்டது.
தற்போது சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகையே உலுக்கி எடுத்து
கொண்டு இருக்கிறது.
பொதுவாக எல்லா வகையான
வைரஸ் காய்ச்சலுக்கும்
நமது உடல்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
செய்தால்
ஒரு வாரத்தில் காய்ச்சலின்
வீரியம் குறையும்;
விரைவில் குணமாகும்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை
குறைக்க உதவும்
அரிய பல மூலிகைகள்
நமது வனங்களில் உள்ளன.
பச்சிலை கசாயம்
கொரோனா காய்ச்சல் வரும் முன்
தடுக்க நம் முன்னோர்கள்
வகுத்துத்தந்த எளிய பச்சிலை
கசாயத்தை உட்கொள்ளலாம்.
சீந்தில் கொடி (அம்ருத் )
என்பது காடுகளில் மரங்கள் மேல் படர்ந்து வளரும் இதய வடிவில் இலைகளை கொண்ட ஒரு கொடிஇனமாகும்.
இதன் மெல்லிய தண்டுகளை
சிறிது சிறிதாக நறுக்கி,
இடித்து அத்துடன்
பொடித்த சுக்கு,
நான்கு மிளகு,
சீரகம்,
மஞ்சள் தூள்,
சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க விடவும்.
ஐந்து நிமிடத்தில் கசாயம்
தயாராகி விடும்.
இதை காலையில் குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதே போல
ஆடாதோடை,
துளசி,
நிலவேம்பு
சேர்த்து கசாயம் செய்து குடித்து வைரஸ் காய்ச்சல் வருமுன் நமது உடலை காப்போம்.
இது போன்ற 3000 வகையான
மூலிகை செடிகள் நமது காடுகளில் உள்ளன.
எனவே நமக்கும், நமது சந்ததியினருக்கும் எந்த விதமான நோய்கள் வந்தாலும் அவற்றை எதிர் கொள்ள உதவும் பல்வேறு வகையான மூலிகை செடிகள் கொண்ட
வனங்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை ஆகும்.
தமிழ்நாட்டின் மொத்த
நிலப்பரப்பில்
சுமார் 17.59 சதவீதம் காடுகள் அமைந்துள்ளன.
இந்தியாவில் உள்ள தாவரங்களில்
மூன்றில் ஒரு பாகம் தமிழ் நாட்டு வனங்களில் காணலாம்.
இலையுதிர் காடுகள்,
முட்புதர் காடுகள்,
பசுமைமாறாக் காடுகள்,
சதுப்பு நிலக் காடுகள்,
என ஒன்பது வகையான காடுகள்
தமிழ் நாட்டில் உள்ளன.
அரிய வனப்பகுதிகள் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும்,
கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன.
இயற்கை அளித்த கொடையான பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் காக்க தமிழ்நாட்டில்
நீலகிரி,
மன்னார் வளைகுடா,
அகஸ்திய மலை,
என மூன்று உயிர் கோளங்கள்.
ஆனை மலை,
முதுமலை,
களக்காடு முண்டந்துறை,
சத்தியமங்கலம்,
என நான்கு புலிகள் காப்பகங்கள்,
ஐந்து தேசிய பூங்காக்கள்,
எட்டு சரணாலயங்கள்,
15 பறவைகள் காப்பகங்கள்,
என பல பாதுகாக்கப்பட்ட பகுதிகள்
தமிழ்நாடு வனத்துறையால்
நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
புலிகளின் எண்ணிக்கை
தமிழ்நாட்டில் வெகுவாக
அதிகரித்து வருகிறது.
யானைகள்,
புலிகள்,
காட்டெருமை,
சிறுத்தை,
புள்ளிமான்,
நீலகிரி வரையாடு,
சிங்கவால் குரங்கு,
தேவாங்கு,
கடமான்,
என பல்வேறு விலங்குகளும் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன.
பிச்சாவரம், முத்துப்பேட்டை
பகுதிகளில் அமைந்துள்ள
அலையாத்தி காடுகள்
மீன் உற்பத்தியை பெருக்கிடவும்,
புயல், சுனாமி போன்ற பேரிடர்களிலிருந்து நிலப்பகுதியை காப்பாற்ற துணை புரிகிறது.
சென்னைக்கு அருகே அமைந்துள்ள
வண்டலூர் உயிரினப்பூங்கா
ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரினப் பூங்காவாகும்.
ஆக்சிஜன் வங்கி
சென்னையில் உள்ள கிண்டி
தேசிய பூங்கா
சென்னை மாநகரத்தின் ஆக்சிஜன் வங்கியாக செயல்படுகிறது.
“உலகில் மாற்றம் ஏற்படுத்துவது நீயாக ஏன் இருக்கக்கூடாது” என்று கேட்டார் மகாத்மா காந்தி.
எனவே இந்த இனிய நன்னாளில் வனப்பாதுகாப்புக்கு உதவி செய்யவும்,
மரம் வளர்க்கவும் உறுதி ஏற்று செயல்படுவோம்.
நீங்கள் நகர்ப்புறத்தில்
இருப்பவராக இருந்தால்,
வீட்டை சுற்றியும்,
சாலையோரங்களிலும்
மரங்களை நட்டு
அவற்றை பாதுகாக்க
துணை புரியுங்கள்.
வேம்பு,
காட்டு பூவரசு,
அரசமரம்,
மந்தாரை,
போன்ற மரங்களை நடுவதன் மூலம் நாம் நமது சுற்றுப்புறத்தை ஓரளவு தூய்மைப்படுத்த முடியும்.
நீங்கள் விவசாயியாக
இருந்தால்,
தேக்கு,
மலைவேம்பு,
குமிழ்,
தைல மரம்,
சவுக்கு,
மூங்கில்
என பயன்தரும் மரங்களை தேர்ந்தெடுத்து உங்கள் நிலத்தில் நடலாம்.
வண்டல் மண்ணுக்கு
தேக்கு
மூங்கில்
நல்ல பயன் கொடுக்கும்.
மணற்பாங்கான பூமிக்கு
சவுக்கு மரம்,
சிசு மரம்
உகந்தவை.
செம்மண்ணுக்கு
மலைவேம்பு,
தைலம்,
சந்தன மரங்கள்
நட்டால் நல்ல பயன் கிடைக்கும்.
நீங்கள் குடும்பத்
தலைவராக இருந்தால்
உலக வன நாளன்று குடும்பத்துடன் அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்று இயற்கையை சுவாசித்து நமக்கு பல்வேறு பயன்களை தரும் காடுகளுக்கு நன்றி செலுத்துவீர்.
நீங்கள் மாணவராக
இருப்பின்
உங்கள் பள்ளி அல்லது
கல்லூரியில் உள்ள
தேசிய பசுமைப்படை
சூழல் மன்றம்
ஆகியவற்றின் உறுப்பினராக சேர்ந்து, ஆசிரியருடன் இணைந்து
பள்ளி வளாகத்தில் மரங்கள் நட்டு பாதுகாப்பீர்.
நீங்கள் தொழில்
முனைவராக இருப்பின்
உங்கள் தொழிற்சாலை
வளாகத்தில்
மரங்கள் நட்டு பசுமை சேர்ப்பீர்.
மரங்கள் நட்டு பசுமை கூட்டுவோம்!
பழம் பெருமை வாய்ந்த தமிழ் மண்ணுக்கு பசுமை போர்வை உடுத்தி பெருமை சேர்ப்போம்!
நாமும் நமது சந்ததியினரும்
நலம்பெற நாளும்
வனம் காப்போம்!
------------------------------------------.