ஓசூர் பேடரப்பள்ளி 3-வது வார்டு
கோலாகலமாக நடந்த
முன்னாள் கவுன்சிலர்
நாராயணரெட்டியின்
மகள்
திருமண விழா
ஓசூர். நவ. 20. –
ஓசூர் பேடரப்பள்ளியைச் சேர்ந்த
முன்னாள் நகராட்சி கவுன்சிலர்
நாராயணரெட்டியின் மகள்
நவ்யாஸ்ரீ – சுபாஷ் திருமணம்
கோலாகலமாக நடைபெற்றது.
ஓசூர் 3-வது வார்டு நகராட்சி கவுன்சிலராக வி. நாராயணரெட்டி பதவியில் இருந்த போது, பேடரப்பள்ளி வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றி உள்ளார். மேலும் பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக திறம்பட பணியாற்றி உள்ளார்.
நவ்யாஸ்ரீ – சுபாஷ்
இவரது மகள் நவ்யாஸ்ரீ – சுபாஷ் திருமணம், சர்ஜாபூர் சிக்க திருப்பதி சாலை, அபையா சர்க்கிளில் உள்ள பேலஸ் கார்டன் மண்டபத்தில் நவம்பர் 19-ம் தேதி மாலை வரவேற்பும், மற்றும் 20-ம் தேதி காலை திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்வில் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஓசூர் மாநகர சுகாதார குழு தலைவர் என்.எஸ். மாதேஸ்வரன், மாநகர கல்விக்குழு தலைவர் ஸ்ரீதர், மாநகர நிதிக் குழு தலைவர் சென்னீரப்பா, மாநகர திட்டக்குழு தலைவர் அசோகா, கவுன்சிலர்கள் சிவராம், நாகராஜ், முன்னாள் கவுன்சிலர் நடிகர் முரளி, அரசனட்டி ரவி, திமுக பிரமுகர் சீனிவாசன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் திரளாக
கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.