கிருஷ்ணகிரி மாவட்டம்
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில்
ஒன்றிய அரசின்
தொழிலாளர் விரோத,
விவசாயிகள் விரோத,
மக்கள் விரோத,
கார்ப்ரேட் ஆதரவு பட்ஜெட் நகல்
கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம்
ஓசூர். பிப்ரவரி. 6. –
ஓசூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள்
கூட்டமைப்பு சார்பில், ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத,
மக்கள் விரோத, கார்ப்ரேட் ஆதரவு பட்ஜெட்
நகல் கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை முன்பு நடைபெற்ற இந்த பட்ஜெட் நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு
தலைமை
எல்பிஎப். மாவட்ட
கவுன்சில் செயலாளர்
ஆர்.கோபாலகிருஷ்ணன்,
ஏஐடியூசி மாவட்ட செயலாளர்
எம்.கே. மாதையன்,
சிஐடியூ மாவட்ட செயலாளர்
என்.ஸ்ரீதர்,
ஐஎன்டியூசி மாவட்ட
பொதுச்செயலாளர்
ஜி.முனிராஜ்,
ஆகியோர் தலைமை வகித்தனர்.
விளக்கவுரை
எல்பிஎப் மாநில
பேரவை செயலாளர்
பி.கிருஷ்ணன்,
சிஐடியூ மாவட்ட தலைவர்
எஸ்.வாசுதேவன்,
ஐஎன்டியூசி மாவட்ட
துணை தலைவர்
கே.பக்தவச்சலம்,
ஏஐடியூசி மாவட்ட
துணைத்தலைவர்
ஏ.சங்கரய்யா,
எல்பிஎப். மாவட்ட கவுன்சில்
துணை தலைவர்
ஒய்.கிருஷ்ணமூர்த்தி,
சிஐடியூ மாவட்ட பொருளாளர்
ஜி.ஸ்ரீதரன்,
ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர்
கே.செந்தில்,
சிஐடியூ மாவட்ட துணை தலைவர்
பி.ஜி.மூர்த்தி,
ஏஐடியூசி மாவட்ட குழு
யு. சின்னசாமி,
ஐஎன்டியூசி மாவட்ட நிர்வாகி
எஸ்.எம். கோதண்டராமன்,
ஆகியோர் விளக்கவுரையாற்றினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
கோரிக்கைகள்
மத்திய தொழிற்சங்கங்கள் கொடுத்த கோரிக்கைகளை நிறைவேற்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை விற்று நிதி சேர்க்கும் முடிவை வைவிட வேண்டும்.
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும்.
குறைந்தபட்ச பென்சன் ரூ.9000 அறிவிக்க வேண்டும்.
கார்ப்ரேட் நிதி நிறுவனங்களின் வருமானத்திற்கு வரிபோட்டு நிதியை உருவாக்க வேண்டும்.
என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி பட்ஜெட் நகலை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்பிஎப் மாவட்ட
கவுன்சில் பொருளாளர்
ஏ.பசவராஜ்
நன்றியுரையாற்றினார்.
இதில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள், தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
-----------------------------------------.