2026 புத்தாண்டு
கிருஷ்ணகிரி மாவட்டம்
மத்திகிரி நூற்றாண்டுகள்
பழமையான தூய ஆரோக்கிய அன்னை
பாரம்பரிய ஆலயத்தில்
புத்தாண்டு சிறப்பு ஜெப வழிபாடு
ஓசூர். ஜனவரி. 1. –
நூற்றாண்டு பழமையான பாரம்பரிய
தூய ஆரோக்கிய அன்னை ஆலயம்
ஓசூர் மத்திகிரி குதிரைப்பாளையத்தில்
அமைந்துள்ள நூற்றாண்டு
பழமையான பாரம்பரிய
தூய ஆரோக்கிய அன்னை
ஆலயம் மற்றும்
மத்திகிரி நேதாஜிநகர் புதிய ஆலயம்
ஆகிய இரு ஆலயங்களிலும்
ஆங்கிலப் புத்தாண்டு
சிறப்பு ஜெபவழிபாடு நடைபெற்றது.
பாரம்பரிய ஆலயம்
2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு
மத்திகிரி குதிரைப் பாளையத்தில்
அமைந்துள்ள நூற்றாண்டுகள்
பழமையான தூய ஆரோக்கிய
அன்னை பாரம்பரிய தேவாலயத்தில்
டிசம்பர் 31-ம் தேதி இரவு சிறப்பு
ஜெபவழிபாடு நடைபெற்றது.
இந்த சிறப்பு ஜெபவழிபாட்டில்
மத்திகிரி தூய ஆரோக்கிய அன்னை
ஆலய பங்கு தந்தை
அருட்பணி கிறிஸ்டோபர்,
அருட்பணி ஜோசப் ரொசாரியோ.
ஆகியோர் பங்கேற்று புத்தாண்டு
சிறப்பு திருப்பலி,
நற்கருணை ஆராதணை
மற்றும் மறையுரையுடன்
புத்தாண்டு வாழ்த்து கூறி
சிறப்பு ஜெபவழிபாடு கூட்டத்தை வழிநடத்தினார்கள்.
புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனையில்
பங்கேற்ற அனைவருக்கும்
அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
நள்ளிரவு புத்தாண்டு
ஜெபவழிபாடு
அதே போல
மத்திகிரி நேதாஜி நகரில் உள்ள
தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
ஆங்கிலப் புத்தாண்டு முன்னிட்டு
டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 11.00 மணிக்கு
புத்தாண்டு சிறப்பு ஜெபவழிபாடு நடைபெற்றது.
இந்த இரண்டு புத்தாண்டு ஜெபவழிபாடுகளிலும்
அருட்சகோதரிகள்,
ஆலய பங்கு குழுவினர்,
பாடல் குழுவினர்,
மற்றும் நூற்றுக்கணக்கான பங்கு மக்கள் பங்கேற்றனர்.
அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
தொடர்ந்து தூய ஆரோக்கிய
அன்னை ஆலயத்தில்
2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி
காலை 9 மணிக்கு புத்தாண்டு
சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மத்திகிரி தூய ஆரோக்கிய
அன்னை தேவாலயம்
வண்ணவிளக்குகளால்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.
---------------------------------.