வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல்
சிறப்புமுகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் சட்டமன்ற தொகுதி
மத்திகிரியில் வாக்காளர் பட்டியலில்
பெயர் சேர்த்தல் தொடர்பான
சிறப்பு முகாம்கள் தொடக்கம்
ஆர்வத்துடன் விண்ணப்பித்த
புதிய வாக்காளர்கள்
ஓசூர். டிச. 27. –
ஓசூர் சட்டமன்ற தொகுதி
மத்திகிரியில் வாக்காளர் பட்டியல்
பெயர் சேர்த்தல்,
பெயர் சரிபார்த்தல்,
முகவரி திருத்தம்
தொடர்பான சிறப்பு முகாம்கள்
டிசம்பர் – 27-ம் தேதியன்று தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
6 சட்டமன்ற தொகுதிகளில்
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல்
தொடர்பான சிறப்பு முகாம்கள்
2025 டிசம்பர் – 27. 28 மற்றும்
2026 ஜனவரி 3-, 4 ஆகிய நான்கு நாட்கள்
நடைபெற உள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்திருந்தார்.
சிறப்பு முகாம்
2025 -டிசம்பர் 27-ம் தேதி முதல்
டிச.28-ம் தேதி
மற்றும்
2026 - ஜனவரி - 03, 04-ம் தேதி வரை
அதன்படி ஓசூர் சட்டமன்ற தொகுதியில்
உள்ள மத்திகிரியில்
டிசம்பர் 27-ம் தேதியன்று வாக்காளர் பட்டியல்
பெயர் சேர்த்தல் தொடர்பான
சிறப்பு முகாம்கள் தொடங்கியது.
இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 27-ம் தேதி முதல்
டிச.28-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை)
மற்றும்
2026 ஜனவரி - 03, 04, ஆகிய நாட்களிலும்
நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள்...
மத்திகிரியில் உள்ள
அரசு துவக்கப்பள்ளி,
அரசு மேல்நிலைப்பள்ளி
அரசு உருது நடுநிலைப்பள்ளி
கர்ணூரில் உள்ள
அரசு துவக்கப்பள்ளி
ஆகிய 4 இடங்களில்
இந்த சிறப்பு முகாம்கள்
தொடங்கியுள்ளது.
இந்த நான்கு முகாம்களில் மாநகராட்சி
துப்புரவு ஆய்வாளர்
திரு. அன்பழகன்
தலைமையில் 10 ஆசிரியர்கள்,
சத்துணவு ஒருங்கிணைப்பாளர்கள்
மற்றும் 30-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள்
என மொத்தம் 40 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முகாமில்
வாக்காளர் பட்டியலில்
புதிதாக பெயர் சேர்த்தல் -
முகவரி திருத்தம் செய்தல்
உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
புதிய வாக்காளர் சேர்த்தல்
இந்த முகாமில் 01.01.2026யை தகுதி நாளாக
கொண்டு 18 வயது நிரம்பியவர்கள்
படிவம் எண் 6 உடன் உறுதிமொழி
படிவத்தை சமர்ப்பித்து
தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில்
சேர்க்க விண்ணபித்தனர்.
இந்த சிறப்பு முகாம்களில்
புதிதாக பெயர் சேர்த்தல் படிவம் 8.
பெயரை நீக்குதல் படிவம் 7.
வாக்காளர் பட்டியலில்
திருத்தம் செய்தல்
போன்றவற்றிக்கு படிவம் 8
ஆகிய படிவங்கள் வழங்கப்பட்டது.
வாக்காளர் பட்டியலில்
பெயர் சரிபார்ப்பு
இந்த சிறப்பு முகாமில்
பெரும்பாலான வாக்காளர்கள்
குடும்பத்துடன் வருகை தந்து
தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில்
இடம் பெற்றுள்ளதா என சரிபார்த்துச்
சென்றனர்.
புதிய வாக்காளர்கள்
மேலும் இந்த சிறப்பு முகாம்களில்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க
காலையில் இருந்தே 100-க்கும் மேற்பட்ட
18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வருகை தந்து விண்ணப்பித்தனர்.
வரைவு வாக்காளர் பட்டியல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும்
7,54,156 ஆண்கள்,
7,51,658 பெண்கள்.
263 மூன்றாம் பாலினத்தவர்
என மொத்தம் 15,06,077 வாக்காளர்கள்
இடம் பெற்றுள்ளனர்.
----------------------------------.