விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண்
சாதனையாளர்
விண்வெளி வீராங்கனை
சாலி ரைட்
மே 26 - 1951 –
அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை
சாலி ரைட்
74-வது பிறந்தநாள்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மே. 26. –
சாலி கிறிஸ்டென் றைட்
(Sally Kristen Ride;
மே 26 1951 - சூலை 23, 2012)
அமெரிக்க இயற்பியலாளரும்
நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனையும் ஆவார்.
விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆவார்.
இவர் சாலஞ்சர் மீள்விண்கலத்தில்
1983-ம் ஆண்டும்,
1984-ம் ஆண்டும், இரு தடவைகள் விண்வெளி சென்றார்.
இவருக்கு முன்னர் சோவியத்தைச் சேர்ந்த வலண்டீனா டெரெஷ்கோவா (1963), மற்றும் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா (1982) ஆகிய பெண்கள் விண்ணுக்குச் சென்றிருந்தனர்.
சாலி ரைட் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1951 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் பிறந்த இவர் விண்வெளி வீராங்கனை மற்றும் இயற்பியலாளராக விளங்கினார்.
இவர் தனது 32-வது வயதில் விண்வெளியில் கால்பதித்தார்.
இதன் பின்னர் கலிஃபோர்னியா ஸ்பேஸ் இன்ஸ்டிட்யூட்டில் பேராசிரியராக பணியாற்றினார். இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பாடம் குறித்த விழிப்புணர்வும் ஊக்குவிப்பும் அளித்து வந்தார். கலிஃபோர்னியாவில் 2012-ம் ஆண்டு உயிரிழந்தார்.
1977ஆம் ஆண்டு விண்வெளிக்குப் பெண்களை அனுப்புவதற்காகச் செய்தித்தாளில் விளம்பரம் செய்திருந்தது ‘நாசா’ அமெரிக்க விண்வெளி மையம்.
சாலியும் விண்ணப்பித்தார்.
சுமார் எட்டாயிரம் விண்ணப்பங்களில் இருந்து நாசா தேர்ந்தெடுத்த வெகு சிலரில் சாலியும் ஒருவர். ஆறு ஆண்டுகள் நாசாவில் பயிற்சி எடுத்த பிறகு, 1983ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று சாலி விண்வெளிக்குப் பறந்தார்.
இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண் என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையைப் படைத்தார்.
ஆறு நாட்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பி வந்தார். சாலியின் திறமையால் 1984ஆம் ஆண்டு மீண்டும் விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
1987ஆம் ஆண்டு நாசாவிலிருந்து வெளியேறி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அறிவியலும் கணிதமும் படிக்க விரும்பும் பெண்களுக்கு உதவினார். பள்ளி மாணவர்களுக்கு விண்வெளித் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார்.
2003ஆம் ஆண்டு விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘தி அஸ்ட்ரானட் ஹால் ஆஃப் ஃபேம் ஹானர்ஸ்’ இவருக்கு வழங்கப்பட்டது.
2012ஆம் ஆண்டு கணையப் புற்றுநோயால் மரணம் அடையும்வரை, மாணவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு அறிவியலையும் கணிதத்தையும் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருந்தார்.
சிறார்களுக்காகவும் ஆசிரியர்களுக்காகவும் அறிவியல் புத்தகங்களை எழுதியிருக்கிறார். அமெரிக்கா முழுவதும் அறிவியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.
----------------------------------------.