ஜோதி தமிழ்
இணைய இதழ்
Hosur News
Hosur News
ஓசூர் மேக்னம் அரிமா
சங்கம் சார்பில்
பார்வையற்றோருக்கு
மளிகை
பொருட்கள் வழங்கல்
தனியார் நிறுவனங்களில்
பார்வையற்றோருக்கு வேலை
வழங்க கோரிக்கை
ஓசூர். நவ. 19. –
by Jothi Ravisugumar
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில் பார்வையற்றோருக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஓசூரில் மேக்னம் அரிமா சங்கம் சார்பில் பார்வையற்றேருக்கு மளிகை பொருட்களை பேருந்து நிலைய காவல் கட்டுப்பாட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகலநாதன், பெண் காவலர் அம்பிகா ஆகியோர் வழங்கினர்.
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் மேக்னம் அரிமா சங்கம் இயங்கி வருகிறது.
இந்த சங்கத்தின் சார்பில், மலைவாழ்
மக்கள், சாலையோர சிறு வியாபாரிகள்
உள்ளிட்ட பொருளாதார நலிவடைந்த
பிரிவினர்கள் மற்றும் அரசுப்பள்ளி
பராமரிப்பு,
அரசு மருத்துவமனைகளுக்கு
தேவையான மருத்துவ
உபகரணங்கள் வழங்குவது
உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட
உதவிகள் வழங்கும் பணியில்
ஈடுபட்டு வருகின்றனர்.
பிறந்த நாள் விழா
திருமணநாள் விழா
அதன் தொடர்ச்சியாக
மேக்னம் அரிமா சங்கத்தின்
தலைவர் மகேந்திரன் அவர்களின்
மகள் எம்.பவித்ரா-வின்
பிறந்தநாள் விழா மற்றும்
மேக்னம் அரிமா சங்க உறுப்பினர்
ரஜினிகாந்த் அவர்களின் திருமணநாள் விழா
முன்னிட்டு
ஓசூரில் உள்ள பார்வையற்றோருக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு ஓசூர் பேருந்து நிலைய
வளாகத்தில் நடைபெற்றது. இதில் பேருந்து நிலைய காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு
உதவி ஆய்வாளர் பிரகலநாதன் மற்றும் பெண் காவலர் அம்பிகா ஆகியோர் பங்கேற்று பார்வையற்றவர்களுக்கு மளிகை பொருட்களை
வழங்கினர்.
வாழ்த்துப் பாடல்
மளிகைப் பொருட்களை பெற்றுக்கொண்ட
பார்வையற்றோர், பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி தங்களுடைய நன்றியை
தெரிவித்துக்கொண்டனர்.
ஓசூர் பார்வையற்றோர் முன்னேற்ற
நலச்சங்கம்
இந்த நிகழ்வில்
ஓசூர் பார்வையற்றோர்
முன்னேற்ற நலச்சங்க பொதுச்செயலாளர் ரகுராமன்,
மேக்னம் அரிமா சங்க தலைவர் மகேந்திரன், செயலாளர்(நிர்வாகம்) கண்ணன்,
செயலாளர்(திட்டம்) ரவிசங்கர், பொருளாளர் மாதேஷ்குமார் மற்றும் கண் மருத்துவ முகாம்
தலைவர் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தனியார் நிறுவனங்களில்
பார்வையற்றோருக்கு வேலை வழங்கிடுக
பார்வையற்றோர் முன்னேற்ற நலச்சங்க
பொதுச்செயலாளர் பி.ரகுராமன் கூறியதாவது,
ஓசூரில் 2022-ம் ஆண்டு பார்வையற்றோர் முன்னேற்ற நலச்சங்கம் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தில் 35 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கத்தில் தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் திம்மராஜ், பொருளாளர் சி.ராஜா
ஆகியோர் உள்ளனர்.
ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில்
முழுமையாக பார்வையற்றோர் மற்றும் சிறிய அளவில் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முன்வரவேண்டும். மேலும் தொழிலதிபர்கள், தங்களுடைய பிறந்தநாள், திருமணநாள் உள்ளிட்ட
விசேஷ நாட்களில் பார்வையற்றோருக்கு உணவுப்பொருட்கள், ஆடை உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.